தமிழகம்

1.புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையத்தில் இருந்து புதுச்சேரி-ஐதராபாத் விமான சேவையை முதல்வர் நாராயணசாமி நேற்று தொடங்கி வைத்தார்.இதன் மூலம் மூன்றாவது முறையாக தற்போது மீண்டும் புதுவையில் இருந்து விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.
2.சுதந்திர தினத்தை முன்னிட்டு அண்ணாசாலை தலைமை அஞ்சலகத்தில் நிரந்தர அஞ்சல்தலைக் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.
3.நாட்டின் 71-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயில் கோபுரத்தில் தேசியக்கொடி கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி ஏற்றப்பட்டது.


இந்தியா

1.தமிழக அரசு கொண்டு வந்துள்ள நீட் அவசர சட்டத்துக்கு மத்திய சட்ட அமைச்சகம்,மத்திய சுகாதாரம் மற்றும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகங்கள் ஒப்புதல் வழங்கியுள்ளன.ஆளுநர் வித்தியாசாகர் ராவ் ஒப்புதல் வழங்கியவுடன் இந்த சட்டம் நடைமுறைக்கு வரும்.
2.சிறுவர்களை விளையாட்டில் அடிமையாக்கி தற்கொலை செய்து கொள்ளத் தூண்டும் அபாயகரமான புளூவேல் இணையதள விளையாட்டுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.


விளையாட்டு

1.பாகிஸ்தானின் முதல் தர போட்டிகளில் விளையாடி வந்த இளம் கிரிக்கெட் வீரர் ஜுபைர் அகமது, பவுன்சர் பந்து தலையில் தாக்கியதில் காலமானார்.


இன்றைய தினம்

1.1982 – முதலாவது CD ஜெர்மனியில் வெளியிடப்பட்டது.
2.இன்று இந்தோனேசியாவில் சுதந்திர தினம்.

 

– தென்னகம்.காம் செய்தி குழு