தமிழகம்

1.மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான ஶ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர் மாவட்டம்) வனப்பகுதியில் உயிரியல் ஆய்வாளர்கள் புதிய வகை தவளை இனத்தை கண்டறிந்துள்ளனர்.இதன் முகம் பன்றியின் முகத்தை ஒத்துள்ளது.இந்த தவளை இனத்திற்கு 2014ல் மரணமடைந்த Herpetologist (நிலத்திலும் நீரிலும் வாழ்வன மற்றும் ஊர்வன பற்றி ஆராய்பவர் திரு. N. பூபதி நினைவாக Nasikabatrachus bhupathi என பெயரிட்டுள்ளனர்.


இந்தியா

1.கங்கை நதி கரையில் தூய்மையை பராமரிக்க வலியுறுத்தி உத்திர பிரதேச அரசு Namami Gange Jagriti Yatra என்ற பிரச்சார இயக்கத்தை துவக்கியுள்ளது.
2.பூமியை பற்றி முழுமையாக ஆராய ஏதுவாக HySIS (Hyperspectral Imaging Satellite) என்ற செயற்கைகோளை இஸ்ரோ உருவாக்கி வருகிறது.
3.தேசிய திறன் வளர்ச்சி கழகம், கூகுள் இந்தியாவுடன் இணைந்து 150 மில்லியன் (15 கோடி) இளைஞர்களுக்கு 2022க்குள் ஆண்ட்ராய்ட் திறன் வளர்ச்சி பயிற்சி (Android Skill Developement Programme) வழங்கும் திட்டத்தை துவக்கியுள்ளது.
4.நிதி ஆயோக் அமைப்பின் சார்பில் இளம் தொழில் முனைவோர் பங்கு கொண்ட Champions Of Change என்ற மாநாடு புது டெல்லியில் நடைபெற்று முடிவடைந்துள்ளது.
5.தூய்மை இந்தியா (Swachh Bharat) சார்பிலான அனைத்து திட்டங்கள் மற்றும் செய்திகளை அறிந்து கொள்ள 1969 என்ற தொலைபேசி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
6.ரெயில்வே வாரிய தலைவர் பொறுப்பில் இருந்து ஏ.கே. மிட்டல் ராஜினாமா செய்துள்ளார்.ரெயில்வே வாரியத்தின் புதிய தலைவராக அஸ்வினி லோகானி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.இவர் தற்போது ஏர் இந்தியா தலைவராக பதவி வகித்து வருகின்றார்.
7.காட்மர் என்ற பாரம்பரிய கல் எறிதல் திருவிழா மத்திய பிரதேச மாநிலம், ஜாம் ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள சாவர்காவன் மற்றும் பந்துர்னா நகரங்களில் நடைபெற்று முடிவடைந்துள்ளது.


வர்த்தகம்

1.22 நிறுவனங்களின் பங்குகளை இணைத்து ETF Bharat – 22(Exchange Traded Fund) என்ற நிதி அமைப்பை நிதியமைச்சகம் உருவாக்கியுள்ளது.


உலகம்

1.8-வது மீகாங் கங்கை கூட்டுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்று முடிவடைந்துள்ளது.மீகாங் கங்கை கூட்டுறவு அமைப்பின் உறுப்பு நாடுகள் – இந்தியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், லாவோஸ் , கம்போடியா, மியான்மர் மற்றும் தாய்லாந்து ஆகும்.


இன்றைய தினம்

1.1939 – உலகின் முதலாவது ஜெட் விமானம் Heinkel He 178 சேவைக்கு விடப்பட்டது.
2.1957 – மலேசியாவின் அரசியலமைப்பு சாசனம் அமுலானது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு