தமிழகம்

1.நாட்டின் 71-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதன்முறையாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தேசியக்கொடியை ஏற்றினார்.இதை தொடர்ந்து நல் ஆளுமை விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில், டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் விருதை போரூர் ராமச்சந்திரா பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் விஞ்ஞானியான தியாகராஜனுக்கும்,துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருதை திருவண்ணாமலையை சேர்ந்த தன்னார்வ தொண்டு அமைப்பின் நிறுவனர் செல்வி பிரித்திக்கு வழங்கினார்.சிறந்த மாநகராட்சிக்கான விருது திருநெல்வேலிக்கும், சிறந்த நகராட்சிக்கான விருது முதல் பரிசு சத்தியமங்கலத்திற்கும், 2-வது பரிசு பூவிருந்தவல்லிக்கும், மூன்றாம் பரிசு திருமங்கலத்துக்கும் வழங்கப்பட்டது.சிறந்த பேரூராட்சிக்கான விருது முதல் பரிசு பொன்னம்பட்டிக்கும், 2-வது பரிசு இருகூருக்கும், 3-வது பரிசு நம்பியூருக்கும் வழங்கப்பட்டது.சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கான விருது சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு வழங்கப்பட்டது.சிறந்த மருத்துவர் விருது காஞ்சிபுரம் கண் அறுவை சிகிச்சை மருத்துவர் வீ.ம.சங்கரனுக்கும், சிறந்த சமூகப் பணியாளர் விருது மதுரையைச் சேர்ந்த க்யூர் அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி மைய நிறுவனர் இளையபாரிக்கும், சிறந்த நிறுவனத்துக்கான விருது சென்னை மெடிந்தியா நிறுவனத்துக்கும் வழங்கப்பட்டது. மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக வேலை வாய்ப்பு அளித்த தனியார் நிறுவனத்துக்கான விருது திருச்சியைச் சேர்ந்த ஆர்பிட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.


இந்தியா

1.இந்தியாவின் 71-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று மேற்கு வங்க மாநிலத்தின் புருலியா மன்பஸார் என்ற இடத்தில் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 103 வயது சுதந்திரப் போராட்டத் தியாகி பிஜய் குமார் தத்தா, தேசியக் கொடி ஏற்றினார்.


உலகம்

1.வட கொரியாவிலிருந்து எஃகு உள்ளிட்ட பொருள்களை இறக்குமதி செய்ய சீனா தடை விதித்துள்ளது.
2.இலங்கையில் புதிய வெளியுறவு துறை மந்திரியாக திலக் மரபோனா பதவி ஏற்றுக்கொண்டார் .முன்னதாக வெளியுறவு துறை மந்திரியாக பதவி வகித்த ரவி கருணாநாயகே மீது ஊழலில் தொடர்பு இருப்பதாக வெளியான குற்றச்சாட்டை அடுத்து புதிய வெளியுறவு துறை மந்திரியாக திலக் மரபோனா பதவி ஏற்றுக்கொண்டார்.


விளையாட்டு

1.இந்தியாவின் 71-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கையின் பல்லகெலேவில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தேசியக் கொடியை ஏற்றினார்.


இன்றைய தினம்

1.1945 – சீனாவின் கடைசி மன்னன் பூயி சோவியத் படைகளினால் கைப்பற்றப்பட்டான்.

 

– தென்னகம்.காம் செய்தி குழு