தமிழகம்

1.தமிழ்நாடு சாரண, சாரணியர் இயக்கத் தலைவர் பதவிக்கான தேர்தலில் பள்ளிக்கல்வி முன்னாள் இயக்குநர் பி.மணி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவை 180 வாக்குகள் வித்தியாத்தில் வென்றுள்ளார்.பி. மணி – 232,H. ராஜா – 52 ,செல்லாத வாக்கு – 02.


இந்தியா

1.இந்தியாவின் முதல் விலங்குகள் சட்ட மையம் ( Centre for Animal Law ) ஹைதாராபாத்தில் உள்ள NALSAR சட்ட பல்கலைக்கழகத்தில் துவங்கப்பட்டுள்ளது.
2.National Investigation Agency (NIA) எனப்படும் தேசிய விசாரணை முகமையின் பொது இயக்குநராக Y.C. மோதி IPS நியமிக்கப்பட்டுள்ளார்.சஷஸ்திரா சீமா பால் ( SSB ) படைப்பிரிவின் இயக்குநராக பதவி வகிக்கும் அர்ச்சனா ராமசுந்தரம் IPS செப்டம்பர் 30ல் ஓய்வு பெறுவதால் புதிய இயக்குநராக ரஜினி காந்த் மிஸ்ரா IPS நியமிக்கப்பட்டுள்ளார்.
3.நாட்டின் முதல் பிரதமர், ஜவஹர்லால் நேரு அடிக்கல் நாட்டிய, உலகின் இரண்டாவது மிகப் பெரிய அணையான, சர்தார் சரோவர் அணை, 56 ஆண்டுகளுக்குப் பின், செப்டம்பர் 17ல் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளார்.
4.பெண்கள் ஆபத்து காலங்களில் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் வகையில் ‘மின் காலணி’யை ஹைதராபாத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர் மந்தல சித்தார்த் கண்டுபிடித்துள்ளார்.
5.சர்தார் சரோவர் அணை அருகே Sadhu Bet ( குஜராத் ) பகுதியில் தேசிய பழங்குடியின சுதந்திர போராட்ட வீரர்கள் அருங்காட்சியகம் அமைக்க பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியுள்ளார்.இது போன்ற மேலும் சில அருங்காட்சியகங்கள் நாடு முழுக்க அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.
6.அஸ்ஸாம் அரசு ஊழியர்கள் வயது முதிர்ந்த தங்கள் பெற்றோரையும், வருமானமில்ல ஒற்றை மாற்றுத்திறனாளி உடன்பிறப்பாளரையும் பராமரிப்பது கட்டாயம் ஆக்கும் வகையில் PRANAM என்ற சட்டத்தை அம்மாநில சட்டசபை நிறைவேற்றியுள்ளது.
7.சத்தீஸ்கர் மாநிலம், ராய்பூர் மாவட்டத்தில் உள்ள அபிஹன்பூர் பகுதியில் செப்டம்பர் 07 முதல் செப்டம்பர் 16 வரை 10 நாட்களுக்குள் 10,000 கழிவறைகள் கட்டி சாதனை செய்யப்பட்டுள்ளது.


உலகம்

1.புகழ்பெற்ற ஆங்கில நாடக ஆசிரியை ஜேன் ஆஸடேன் உருவப்படம் பொறித்த பத்து பவுண்டு மதிப்பிலான கரன்சி, பிரிட்டனில் புழக்கத்துக்கு வந்துள்ளது.


விளையாட்டு

1.டார்கெட் ஒலிம்பிக் போடியம் திட்டத்தில் மேலும் 107 வீரர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். இவர்களோடு சேர்த்து மொத்தம் 152 வீரர்கள் TOPS திட்டத்தில் பயிற்சி பெறுகிறார்கள்.தற்போது புதிதாக சேர்க்கப்பட்டுள்ளவர்களில் 4 பேருக்கு மட்டும் 2020 ஒலிம்பிக் வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இவர்கள் அனைவர்க்கும் பயிற்சி உதவித்தொகையாக மாதம் ரூ50,000 / வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இன்றைய தினம்

1.1789 – அமெரிக்க உச்சநீதி மன்றம் நிறுவப்பட்டது.
2.1840 – இலங்கை வங்கி தொடங்கப்பட்டது.
3.1948 – ஹோண்டா நிறுவனம் அமைக்கப்பட்டது.

 

 

– தென்னகம்.காம் செய்தி குழு