இந்தியா

1.SKOCH குழுமம் வழங்கும் Mudra Performance 2017 விருது கார்பொரேசன் வங்கிக்கு (Corporation Bank) வழங்கப்பட்டுள்ளது.
2.Second State Startup Conference , புதுடெல்லியில் நடைபெற்று முடிவடைந்துள்ளது.
3.2nd World Congress of Optometry, ஹைதராபாத்தில் நடைபெற்று முடிவடைந்துள்ளது.
4.5th Coastal Shipping and Inland Water Transportation Business Summit 2017 , கொச்சியில் நடைபெறவுள்ளது.
5.1960களில் கிழக்கு பாகிஸ்தான் ( பின்பு பங்களாதேஷ் ) பகுதிகளில் இருந்து இந்தியாவிற்கு அகதிகளாக புலம்பெயர்ந்த Chakma & Hajong இன மக்களுக்கு , உச்ச நீதிமன்ற உத்தரவின்படி விரைவில் இந்திய குடியுரிமை வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.இதில் Chakma பௌத்த மதத்தையும் Hajong இந்து மதத்தையும் சார்ந்தவர்கள்.
6.Apnalaya என்ற தொண்டு நிறுவனத்தின் சார்பில் Mission – 24 என்ற திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதன்படி பிரிஹன் மும்பை மாநாகராட்சிக்கு உட்பட்ட மிகவும் பினதங்கிய வார்டில் அடிப்படை வசதிகளை செயல்படுத்தி அடுத்த 24 மாதங்களில் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது ஆகும்.
இந்த திட்டத்தை சச்சின் டெண்டுல்கர் துவக்கி வைத்துள்ளார்.இந்த திட்டத்தில் அங்கன்வாடி , பேறுகால மருத்துவமனை , மருந்தகம், பள்ளி மற்றும் சுகாதார பணிகள் ஆகியவை செயல்படுத்தப்படும்.
7.மாற்றுப் பாலினத்தவர்களுக்கான பிரத்யோக மருத்துவமனை அமைக்கப்படும் என கேரளா அறிவித்துள்ளது.மேலும் பாலின மாற்று அறுவைச்சிகிச்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.
8.N R Madhava Menon Best Law Teacher Award 2017 பேராசிரியர். தாஹிர் மெகம்மூத் பெற்றுள்ளார்.
9.கொல்கத்தாவில் அமைந்துள்ள INS நேதாஜி கடற்படை தளத்தில் , நேதாஜியின் 8 அடி உயர வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது.
10.இந்தியாவின் முதல் Green – Field Smart City , ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல்லை துணை ஜனாதிபதி நாட்டியுள்ளார்.


உலகம்

1.அமெரிக்க நிதித்துறை, நியூயார்க்கில் அமைந்துள்ள Habip வங்கி கிளையை மூட உத்தரவிட்டுள்ளது.Habib வங்கி பாகிஸ்தானை சேர்ந்தது ஆகும். சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதற்காக அவ்வங்கி கிளையை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் 225 மில்லியன் டாலர் ( ரூ. 1400 கோடி ) அபராதமும் விதித்துள்ளது.
2.அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காவ்யா கொப்பரப்பு ( Kavya Kopparapu ) மற்றும் அவரது குழுவினர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில், சர்க்கரை நோயால் பதிக்கப்பட்டுள்ளவர்களின் கண் விழிப்படல (Diabetic retinopathy) பாதிப்பை கண்டறியகூடிய முப்பரிமாணத்தில் அச்சடிக்கப்பட்ட லென்சை ( 3D print Lens ) உருவாகியுள்ளனர்.இந்த லென்சை ஸ்மார்ட் போன் செயலியுடன் இணைத்து, கண்களை படம் பிடித்து கண் விழிப்படல பாதிப்பை கண்டறியலாம்.


இன்றைய தினம்

1.இன்று உலக அமைதி தினம் (World Peace Day).
உலக யுத்தத்தின் பாதிப்பை உணர்ந்து அமைதி தினம் பல நாடுகளில் வெவ்வேறு தினங்களில் நடந்து வந்தது. ஐ.நா.வின் பொதுச்சபை 1987ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கூடும் முதல் நாளை உலக அமைதி தினமாக அறிவித்தது. அதன்பின்னர் தங்களின் உறுப்பு நாடுகளின் வாக்குகளை அதிகம் பெற்று செப்டம்பர் 21 ஐ உலக அமைதி தினமாக அறிவித்தது. இது 2002ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வந்தது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு