இந்தியா

1.மாநில தலைமைச் செயலக பிரதான கட்டிடத்துக்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பெயரும், தலைமைச் செயலகத்தில் உள்ள அரசு செயலாளர்கள் அலுவலக கட்டிடத்துக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெயரும், பாரத ஸ்டேட் வங்கி கட்டிடத்துக்கு சோபன்சிங் ஜீனா பெயரும், மற்றொரு கட்டிடத்துக்கு தேவேந்திர சாஸ்திரி பெயரும் சூட்டப்படுகிறது என உத்தரகண்ட் மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் சுதந்திர தின விழாவில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
2.பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான ஜேஇஇ நுழைவுத் தேர்வில் ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரைச் சேர்ந்த கல்பித் வீர்வால் என்ற மாணவர் மொத்தம் 360 மதிப்பெண்கள் பெற்று 100-க்கு 100 என்ற அளவில் தேர்ச்சி பெற்றுள்ளார்.இவருடைய சாதனை, ‘2018-ம் ஆண்டு கல்வியில் சாதனை’ என்ற பிரிவின் கீழ் லிம்கா புத்தகத்தில் இடம்பெறுகிறது.
3.இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை நடைபெற்று 70 ஆண்டுகளுக்குப் பின் நாட்டின் முதல் பிரிவினை அருங்காட்சியகம் பஞ்சாபில் அமிர்தசரஸ் நகரில் அமைக்கப்பட்டுள்ளது.இந்த அருங்காட்சியகத்தில் அடையாள அட்டைகள், அகதிகளின் ஆடைகள் , டிரங்க் பெட்டிகள், கலைப் படைப்புகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
4.இந்திய கடற்படையில் பணியாற்றும் 6 பெண் அதிகாரிகள் INSV தாரிணி என்ற பாய்மர கப்பல் மூலம் உலகை சுற்றி வலம்வர உள்ளனர்.2017 செப்டம்பரில் கோவாவில் துவங்கி 2018ல் நிறைவு செய்கின்றனர். இந்த பயணத்திற்கு “நவிகா சாகர் பரிக்ரமா” என பெயரிடப்பட்டுள்ளது.லெப்டினண்ட் கமாண்டர் வர்டிகா ஜோஷி தலைமையில் லெப்டினண்ட் கமாண்டர் பிரதிபா ஜம்வால், லெப்டினண்ட் கமாண்டர் ஸ்வாதி, லெப்டினண்ட் S. விஜயா தேவி , லெப்டினண்ட் பி.ஐஸ்வர்யா, லெப்டினண்ட் பாயல் குப்தா ஆகிய 6 பேர் இந்த பயணத்தை மேற்கொள்கின்றனர்.
5.மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் நடத்திய அனைத்திந்திய யானைகள் கணக்கெடுப்பின் முடிவுகளின் படி இந்தியாவில் உள்ள ஆசிய யானைகளின் எண்ணிக்கை 27312 என தெரிவிக்கப்பட்டுள்ளது.இது 2012ம் ஆண்டை விட குறைவாகும்.அதிகபட்சமாக கர்நாடகாவில் 6,049, அசாமில் 5719, கேரளாவில் 3054 யானைகள் உள்ளன.
6.வீர தீர செயல் புரிந்தவர்கள் பற்றிய விபரங்களை அறிந்து கொள்ள http://gallantryawards.gov.in என்ற இணையதளத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்துள்ளார்.


உலகம்

1.ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வழங்கும் பெருமைமிக்க சமூக சேவை பதக்கத்தை ( Community Service Medal ) இந்திய வம்சாவளி தொழிலதிபர் பெரோஸ் மெர்சன்ட் பெற்றுள்ளார்.


இன்றைய தினம்

1.1690 – கல்கத்தா நகரம் அமைக்கப்பட்டது.
2.1949 – நேட்டோ ஒப்பந்தம் அமுலுக்கு வந்தது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு