இந்தியா

1.பணியில் இருக்கும் பொழுது மரணமடையும் அரசு ஊழியரின் வாரிசுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்குவதற்கு பதிலாக கருணை அடிப்படையில் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும் என அஸ்ஸாம் மாநில அரசு அறிவித்துள்ளது.
2.ரயில்வே தண்டவாளங்களில் தேங்கியுள்ள கழிவு நீரின் மூலம் கொசு உற்பத்தியாவதை தடுக்க , தெற்கு டெல்லி மாநகராட்சியின் சார்பில் Mosquito Terminator ரயில் மூலம் கொசு மருந்து தெளிக்கப்படுகிறது.
3.மதுரையில் தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் கிளை தொடங்கப்படும் என்றும், இது IIT ,IIM போன்ற உயர் கல்வி நிறுவனங்களுக்கு இணையானதாக இருக்கும் என மத்திய அமைச்சர் அனந்த குமார் அறிவித்துள்ளார்.
4.புதிய இந்தியாவை உருவாக்க உறுதியேற்போம் என்ற கருப்பொருளின் (Theme) அடிப்படையில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75ம் ஆண்டு கண்காட்சி சென்னையில் நடைபெற்றது.


வர்த்தகம்

1.Reliance Defence and Engineering Ltd ( RDEL ) நிறுவனத்தின் பெயர் Reliance Naval and Engineering Ltd. (RNEL) என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
2.கூகுளின் புதிய ஆண்ட்ராய்டு 8.0 இயங்குதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இதற்கு ஓரியோ (Oreo) என பெயரிடப்பட்டுள்ளது.


உலகம்

1.இந்தியா – ஜப்பான் இடையிலான 2வது இணைய பாதுகாப்பு பேச்சுவார்த்தை புதுடெல்லியில் நடைபெற்று முடிவடைந்துள்ளது.அடுத்த பேச்சுவார்த்தை 2018ல் டோக்கியோவில் நடைபெறவுள்ளது.


விளையாட்டு

1.தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு (SAAF U 15 Championship) சார்பில் நேபாளத்தில் நடைபெற்ற 15 வயதுக்குட்பட்டோர் கால்பந்து இறுதிப்போட்டியில் இந்திய அணி நேபாளத்தை வீழ்த்தி கோப்பையை வென்றுள்ளது.
2.நொய்டாவில் நடைபெற்ற 74-வது தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் சவுரவ் கோஷல் (தமிழ்நாடு) 11-6, 11-13, 11-9, 11-6 என்ற செட் கணக்கில் மகேஷ் மங்காவ்ன்கரை (மராட்டியம்) தோற்கடித்து 12-வது முறையாக பட்டத்தை கைப்பற்றினார்.பெண்கள் ஒற்றையரில் தமிழகத்தின் ஜோஸ்னா சின்னப்பா 11-6, 8-11, 11-2, 11-4 என்ற செட் கணக்கில் சக மாநில வீராங்கனை லக்‌ஷயா ரவீந்திரனை வீழ்த்தி 15-வது முறையாக பட்டத்தை சொந்தமாக்கினார்.
3.அமெரிக்காவை சேர்ந்த தொழில்முறை குத்து சண்டை வீரரான பிளாய்ட் மேவெதர் தொடர்ந்து 50 போட்டிகளில் வெற்றி பெற்று உலக சாதனை படைத்துள்ளார்.இதனால் பிரபல குத்து சண்டை வீரரான ராக்கி மார்சியானோவை விட ஒரு வெற்றி அதிகம் பெற்று 50-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றார்.மேவெதர் தனது 50வது போட்டியில் அயர்லாந்தின் மெக் கிரிகோரை வீழ்த்தினார்.


இன்றைய தினம்

1.1919 – அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டது.
2.1945 – ஆஸ்திரேலியாவில் லிபரல் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு