தமிழகம்

1.மதுரை மாவட்டத்தில் மட்டும் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களை பாதுகாக்க போலீஸ் துறையில் தனிப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.
2.கோவை மத்திய சிறை வளாகத்தில் சிறைவாசிகளால் சுத்திகரிக்கப்படும் குடிநீர் நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு சுத்திகரித்து விற்பனைக்கு வரும் குடிநீர் பாட்டிலுக்கு ‘விடுதலை’ என பெயரிடப்பட்டுள்ளது.


இந்தியா

1.தமிழ்நாட்டின் அம்மா உணவகம் போன்று கர்நாடகா அரசின் சார்பில் பெங்களூருவில் இந்திரா உணவகம் துவங்கப்பட்டுள்ளது.
2.உலகின் மிக உயரம் குறைந்த பெண்ணான ஜோதி அம்கே ( 62.8cm) , 51அடி உயர புத்தகத்தை வெளியிட்டுள்ளார். புத்தகத்தின் பெயர் – ‘Kadve Vachan’.இதை எழுதியவர் — ஜைன மத துறவி ஆச்சர்ய தருண் சாகர் மகாராஜ்.
3.இந்தியாவிலேயே முதன்முறையாக பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஹெலிகாப்டர் டாக்ஸி சேவை தொடங்கப்படவிருக்கிறது. தும்பி ஏவியேஷன் (Thumby Aviation) என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து பெங்களூரு பன்னாட்டு விமான நிலையம் இந்த ‘ஹெலி-டாக்ஸி’ சேவையை அறிமுகம் செய்ய உள்ளது.


உலகம்

1.பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்தில் இருக்கும் உலகப்புகழ் பெற்ற பிக்பென் கடிகாரம் பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் 2021-ம் ஆண்டு வரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
2.பாகிஸ்தானின் இடைக்காலப் பிரதமரான ஷாகித் அப்பாஸி தலைமையிலான அமைச்சரவையில் இந்து மதத்தைச் சேர்ந்த தர்ஷன் லால் இடம்பெற்றுள்ளார். இவர் சிந்து மாகாணத்தைச் சேர்ந்தவர் ஆவார்.


விளையாட்டு

1.பிரபல டென்னிஸ் வீரர் ஃபெடரரைப் பற்றி, அவரின் வாழ்க்கை பற்றி ஒன்றிரண்டு புத்தகங்கள் முன்னதாக வெளியாகியுள்ளன. அந்த வரிசையில் சமீபத்தில் ‘ஃபெடகிராஃபிகா ( FEDEGRAPHICA ) எனும் புத்தகம் வெளியாகியுள்ளது.எழுத்தாளர் மார்க் ஹாட்கின்ஸன் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார்.
2.மும்பையில் நடைபெற்ற தொழில்முறை குத்துச்சண்டை போட்டியில் இந்திய நட்சத்திர வீரர் விஜேந்தர்சிங், சீனாவின் ஜூல்பிகர் மைமைடியாலியை வீழ்த்தி ஆசிய பசிபிக் சூப்பர் மிடில்வெயிட் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டார். அத்துடன் ஜூல்பிகரிடம் இருந்த ஒரியன்டல் சூப்பர் மிடில்வெயிட் பட்டத்தையும் தட்டிப்பறித்து தன்னுடன் இணைத்துக் கொண்டார்.தொழில்முறை குத்துச்சண்டைக்குள் நுழைந்த பிறகு தோல்வியே சந்திக்காத 32 வயதான விஜேந்தர்சிங் தொடர்ச்சியாக சுவைத்த 9-வது வெற்றி இதுவாகும்.
3.இரண்டாவது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்) கிரிக்கெட் இறுதி போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி , தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தினை வென்றது.


இன்றைய தினம்

1.இன்று சென்னை தினம் (Madras day).
சென்னை தினம் என்பது தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கி.பி. 1639, ஆகஸ்ட் 22 ஆம் நாளை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பெற்ற ஒரு சிறப்பு நாள் ஆகும்.இந்நாள் 2004 ஆம் ஆண்டில் இருந்து நினைவு கூரப்பட்டு வருகிறது.
2.1848 – நியூ மெக்சிகோ ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கப்பட்டது.
3.1932 – தொலைக்காட்சி சேவையை முதன் முதலாக பிபிசி சோதித்தது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு