இந்தியா

1.இந்திய கடற்படை சார்பிலான வருடாந்திர Dilli கருத்தரங்கம் , கேரளாவில் Ezhimala கடற்படை தளத்தில், India and South East Asia Maritime Trade, Expedition and Civilisation Linkages’ என்ற தலைப்பில் நடைபெற்று முடிந்துள்ளது.
2.2016ம் ஆண்டுக்கான மாத்ருபூமி இலக்கிய விருதுக்கு M. K. சானு தேர்வு பெற்றுள்ளார்.
3.இந்திய விமானப்படை, வீரர்களின் உடல் நிலை பற்றிய தகவல்களை அறிய MedWatch என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது.
4.மேற்குவங்க மாநில அரசு பட்டியல் இன ஆலோசனை குழுவை ( scheduled caste advisory council ) ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற ஆலோசனை குழு இந்தியாவிலேயே முதன்முறையாக மேற்கு வங்கத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
5.அசாம் சாஹித்ய சபா வழங்கும் முதலாவது தேசிய இலக்கிய விருது நமீதா கோகலேக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் எழுதியுள்ள நூல்கள் — Paro: Dreams of Passion ., A Himalayan Love Story ., The Book of Shadows ., & Things to Leave Behind.


உலகம்

1.G 20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி கவர்னர்கள் மாநாடு வாஷிங்டனில் அக்டோபர் 13ல் நடைபெற்று முடிந்துள்ளது. இந்தியா சார்பில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி கலந்துகொண்டுள்ளார்.
2.எபோலா நோய்க்காக புதிதாக இரண்டு தடுப்பு மருந்து cAd3-EBOZ & rVSV-ZEBOV குறிப்பிடத்தக்க அளவிலான பரிசோதனை முடிவுகளை அளித்துள்ளது.


விளையாட்டு

1.4 நாட்கள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு பரிட்சார்த்த அடிப்படையில் ICC அனுமதி வழங்கியுள்ளது. முதல் போட்டி ஜிம்பாப்வே – தென்னாப்பிரிக்கா இடையே நடைபெறவுள்ளது.


இன்றைய தினம்

1.2001 – விண்டோஸ் எக்ஸ்பி வெளியிடப்பட்டது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு