இந்தியா

1.சென்னைக்கும், தெலுங்கானா மாநிலம் காசிபேட்டுக்கும் இடையிலான 643 கி.மீ. தூரத்தை 3 மணி 15 நிமிட நேரத்தில் அடையும்வகையில், ரெயில்களின் வேகத்தை அதிகரிக்க ஆய்வு நடத்தப்பட உள்ளது. இதற்காக ரெயில்வே துறைக்கும், ஜெர்மனிக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
2.நாட்டில் உள்ள 21,000 கீழமை நீதிபதிகளின் ஊதிய விகிதத்தை மாற்றி அமைக்க, மத்திய சட்ட அமைச்சகம் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி P. வெங்கட்ராம ரெட்டி தலைமையில் இரண்டாவது தேசிய நீதிபதிகள் சம்பள கமிசன் அமைக்க ஒப்புதல் வழங்கியுள்ளது.
3.காரக்பூர் IIT, டிஜிட்டல் அகாடமி அமைக்க சாம்சங் இந்தியா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
4.ஹரியானாவில் வாழும் நாடோடி பழங்குடியினருக்கு ( nomadic tribes ) ரேஷன்கார்டு வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.
5.Master card நிறுவனம் இந்தியாவில் தனது முதல் புத்தாக்க ஆய்வகத்தை ( innovation lab ) புனேவில் அமைத்துள்ளது. ( உலகவில் 9வது மற்றும் ஆசிய அளவில் 2வது ஆய்வகம் )
6.அரசு பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்க்கீடு வழங்கி பீகார் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
7.சர்வதேச தெருக்கூத்து கலைவிழா ( international Puppet festival ) கொல்கத்தாவில் அக்டோபர் 26 – 31 வரை நடைபெறுகிறது. இத்திருவிழாவிற்கு PUN (Puppets Unite Neighbours) என பெயரிடப்பட்டுள்ளது.
8.அக்டோபர் 02 / 2019 ல் துவங்கவுள்ள மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாள் விழாவின் ஒருங்கிணைப்பு குழு தலைவராக பிரதமர் மோடி நியமனம் செய்யப்பட்டுள்ளார்


உலகம்

1.உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு திறன்கொண்ட ( Artificial Intelligence ) ரோபோ டாக்சியை NVIDIA என்ற நிறுவனம் தயாரித்துள்ளது . அதற்கு Pegasus என்று பெயரிட்டுள்ளனர்.


இன்றைய தினம்

1.இன்று ஐக்கிய நாடுகள் தினம் (United Nations Day).
ஐக்கிய நாடுகள் சபை 1945ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த அமைப்பிற்கான சர்வதேச நீதிமன்றம், சட்டதிட்டங்கள் ஆகியன அக்டோபர் 24 அன்று அமுலுக்கு கொண்டுவரப்பட்டன. ஐக்கிய நாடுகள் சபையே உலகின் மிக உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. ஆனால் இது ஒரு அரசு அல்ல. இந்தச் சபை எந்தப் பொருள் பற்றியும் விவாதம் செய்யவும், ஆராயவும், உலகின் சமாதானம், பாதுகாப்பு மற்றும் நடவடிக்கை எடுக்கும் உரிமையையும் கொண்டுள்ளது.
2.உலக தகவல் வளர்ச்சி தினம் (World Development Inforamtion Day).
உலகளவில் முன்னேற்றம் மற்றும் பிரச்சினைகளைக் கண்டறிந்து அதனை உலக தகவல் வளர்ச்சியில் தீர்க்க வேண்டும் என ஐ.நா.சபை முடிவு செய்தது. 1972ஆம் ஆண்டில் உலக தகவல் வளர்ச்சி தினமாக அக்டோபர் 24ஐ ஐ.நா. சபை அறிவித்தது. 1973ஆம் ஆண்டிலிருந்து இத்தினம் கொண்டாடப்படுகிறது. தகவல்களைப் பெருமளவில் இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஐ.நா. சபை கூறுகிறது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு