தமிழகம்

1.கொடைக்கானலில் கடந்த ஆகஸ்டு 17-ஆம் தேதி மணிப்பூர் மாநில பெண் போராளி இரோம் சர்மிளா – ஆண்டனி தேம்ஸ்வந்த் கொட்டின்கோ திருமணம் நடைபெற்றது.


வர்த்தகம்

1.மாருதி சுஸுகி இந்தியா, சொகுசுக் கார் பிரிவில் ‘சியாஸ் எஸ்’ என்ற புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது.


உலகம்

1.இலங்கை கடற்படை தளபதியாக முதன் முறையாக தமிழரான ரியட் அட்மிரல் ட்ரெவிஸ் சின்னையா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இவர் இலங்கை கடற்படையின் 21-வது தளபதி ஆக பொறுப்பு ஏற்க உள்ளார்.


விளையாட்டு

1.லண்டனில் நடைபெற்று முடிந்த மாற்றுத் திறனாளிகளுக்கான உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என்று மொத்தம் 5 பதக்கங்களை கைப்பற்றியது.ஆண்கள் ஈட்டி எறிதலில் ( F-46 ) இந்தியவீரர் சுந்தர் குர்ஜார் தங்கம் வென்றுள்ளார்.ஆண்கள் உயரம் தாண்டுதலில் (T-42) இந்தியாவின் சரத்குமார் வெள்ளியும், வருண்சிங் பாட்டி வெண்கலமும் வென்றனர்.ஆண்கள் வட்டு எறிதலில் ( F-51) அமித்குமார் சரோஹா வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.பெண்கள் வட்டு எறிதலில் ( F-55) கரம் ஜோதி வெண்கல பதக்கத்தை கைப்பற்றினார்.


இன்றைய தினம்

1.இன்று உலக மனித நேய தினம் (World Humanitarian Day).
போர், இயற்கைப் பேரழிவு, நோய், ஊட்டச்சத்து பற்றாக்குறை போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்ட மக்களை நினைவுகூரும் வகையில் உருவாக்கப்பட்ட உலக மனித நேய தினம் ஆகஸ்டு 19 அன்று கொண்டாடப்படுகிறது. 2008ஆம் ஆண்டு ஐ.நா. சபையினால் உருவாக்கப்பட்டது. துயரத்தால் பாதிக்கப்பட்டோருக்காக பணிபுரிவோர் மற்றும் இப்பணியில் ஈடுபடும்போது காயம் அடைந்தோர், உயிரிழந்தோர்களை நினைவுகூரும் தினமாகவும் கடைப்பிடிக்கப்படுகிறது.
2.இன்று உலக புகைப்பட தினம் (World Photography Day).
லூயிசு டாகுவேரே என்பவர் 1839ஆம் ஆண்டு டாகுரியோடைப் எனப்படும் புகைப்படத்தின் செயல்பாட்டு முறையை அறிமுகப்படுத்தினார். இதனை பிரான்ஸ் அரசு ஆகஸ்டு 19ஆம் தேதி ப்ரீடுதி வேர்ல்டு என உலகம் முழுவதும் அறிவித்தது. இதை எடுத்துரைக்கும் வகையில் உலக புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது. புகைப்படத்தின் சிறப்பு, புகைப்படக் காரர்களின் திறமையை கொண்டாடும் வகையில் இத்தினம் அமைகிறது.
3.1985 – கொழும்பு தலைமை அஞ்சல் அலுவலகம் திறக்கப்பட்டது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு