இந்தியா

1.குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவின் செயலராக ஐ.வி. சுப்பா ராவ் கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார்.


உலகம்

1.கென்யாவில் நடந்த அதிபர் தேர்தலில் உகுரு கென்யட்டா 54.3 சதவீதம் வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றுள்ளார் .இதன் மூலம் இவர் மீண்டும் அதிபராக விரைவில் பதவியேற்கவுள்ளார்.


விளையாட்டு

1.இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் பல்லேகலே மைதானத்தில் நேற்று தொடங்கியது.இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.இதில் நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் லோகேஷ் ராகுல் அரைசதம் அடித்தார். இதன் மூலம் தொடர்ச்சியாக 7 அரைசதங்கள் அடித்து உலக சாதனையை சமன் செய்துள்ளார்.எவர்டன் வீக்ஸ், சந்தர்பால், குமார் சங்ககரா, கிறிஸ் வோக்ஸ், ஆண்டி பிளவர் ஆகியோர் இதற்கு முன்பு இந்த சாதனையை புரிந்திருந்தனர்.
2.ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்தில் வகித்து வந்த பதவியை லலித் மோடி ராஜினாமா செய்துள்ளார்.
3.லண்டனில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் நெதர்லாந்து வீராங்கனை டெனிப்ஹிப்ஸ்ஸி தங்க பதக்கத்தை கைப்பற்றினார்.ஐவேலி கோஸ்ட் வீராங்கனை மரியாஜோஸ் வெள்ளி பதக்கத்தையும்,பகாமசை சேர்ந்த ‌ஷப்ளே வெண்கல பதக்கத்தையும் கைப்பற்றினார்கள்.நீளம் தாண்டுதலில் அமெரிக்க வீராங்கனை ரிஸ் தங்க பதக்கத்தை கைப்பற்றினார்.பெண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டிபிள் சேஸ் ஓட்டத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த எம்மா கோபுரன் தங்க பதக்கத்தை கைப்பற்றினார்.அமெரிக்காவைச் சேர்ந்த கோர்ட்னி பெரிகாஸ் வெள்ளி பதக்கத்தையும்,கென்யாவை சேர்ந்த ஜெபிக்மோய் வெண்கல பதக்கத்தையும் கைப்பற்றினார்கள்.


இன்றைய தினம்

1.இன்று சர்வதேச இடது கைப்பழக்கம் உடையோர் தினம் (International Left Hander’s Day).
உலகின் மொத்த மக்கள்தொகையில் 10 சதவீதம் பேர் இடது கைப்பழக்கம் உடையோர்களாக இருக்கின்றனர். இடது கைப்பழக்கம் என்பது இயற்கையிலே ஒருவரின் மூளை வளர்ச்சியைப் பொறுத்து அமைகிறது. இவர்களின் சாதனைகளைப் பாராட்டும் விதத்திலும், சமூகத்தில் சிறுபான்மையாக உள்ள இவர்களுக்கு தகுந்த பொருட்களை தயாரிக்க வலியுறுத்தியும் இத்தினம் 1992ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்படுகிறது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு