இந்தியா

1. 2018 ஏப்ரலில் அமெரிக்காவில் நடைபெறவுள்ள NASA Human Exploration Rover Challenge க்கு தெலுங்கானா மாநில SR பொறியியல் கல்லூரி மாணவர்கள் 5 பேர் தேர்வு பெற்றுள்ளனர்.
2.விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காத பொழுது, குறைந்தபட்ச ஆதார விலைக்கும் விற்பனை விலைக்கும் உள்ள வித்தியாச தொகையை விவசாயிகளுக்கு வழங்கிட மத்திய பிரதேச அரசு Bhavantar Bhugtan Yojna என்ற திட்டத்தை துவக்கியுள்ளது.
3.தீவிரவாதத்தால் உயிரிழந்த அரசு ஊழியர்களின் மனைவியருக்கு குடும்ப ஊதியம் வழங்கப்படும் என பஞ்சாப் முதல்வர் அறிவித்துள்ளார்.
4.கேரளா அரசின் சார்பில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் கொச்சியில் ஆயுர்வேத மாநாடு மற்றும் கண்காட்சி நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
5.அஸ்ஸாம் மாநில அரசின் சார்பில் முதன்முறையாக உலக முதலீட்டளர்கள் மாநாடு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
6.சர்வதேச கீதா மஹோத்ஸவம், ஹரியானாவின் குருச்சேத்திராவில் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது.
7.உத்தர பிரதேச மாநிலம், தாஸ்னா சிறை வளாகத்தில் உள்ள பல் மருத்துவமனைக்கு, 2008ல் கொலை செய்யப்பட்ட நொய்டாவை சேர்ந்த 14 வயது மாணவி ஆருஷியின் பெயரை சூட்ட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
8.சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளை ( அக்டோபர் 31 ) நாட்டின் ஒற்றுமை, அர்ப்பணிப்பு மற்றும் பாதுகாப்பு மிகுந்த நாளாக கொண்டாட வேண்டும்’’ என மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், மாநில முதல்–மந்திரிகள் மற்றும் மத்திய மந்திரிகளுக்கு கடிதம் எழுதி உள்ளார்.


உலகம்

1. லெபனான் அரசு 2005க்குப்பின் தற்போது 2017ல் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது.
2.11th Association of Southeast Asian Nations (ASEAN) Defense Ministers Meeting (ADMM) and 4th ADMM-Plus பிலிப்பைன்சில் நடைபெற்றுள்ளது. இந்தியா சார்பில் பாதுகாப்புத்துறை அமைச்சர் கலந்துகொண்டுள்ளார்.


இன்றைய தினம்

1.1913 – ஐக்கிய அமெரிக்கா வருமான வரியை அறிமுகப்படுத்தியது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு