இந்தியா

1.இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மாநிலப் பட்டியலில் உள்ள விவசாயத்தை மத்தியப் பட்டியலுக்கோ, பொதுப் பட்டியலுக்கோ மாற்ற வேண்டும் என்று நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் ரமேஷ்சந்த் பரிந்துரை செய்துள்ளார்.
2.அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட், ஐஐடி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்க ” ஸ்பீடு இன்ஸ்டிடியூட் ” என்ற நிறுவனத்துடன் தமிழக பள்ளிக்கல்வித் துறை ஒப்பந்தம் செய்துள்ளது.முதல்கட்டமாக 100 மையங்களில் வகுப்புகள் தொடங்கப்படுகிறது. ஜனவரிக்கு பின், 412 மையங்களில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


உலகம்

1.சோபியா என்ற பெண் ரோபோவுக்கு சவுதிஅரேபிய அரசு குடியுரிமை வழங்கி உள்ளது.இதை ஹாங்காங் கம்பெனியான ‘ஹன்சன் ரோபோடிக்‘ நிறுவனத்தை சேர்ந்த டேவிட் ஹன்சன் வடிவமைத்துள்ளார்.
2.2016ம் ஆண்டு அக்டோபர் மாதம் 13-ந் தேதி மரணம் அடைந்த தாய்லாந்து நாட்டின் மன்னர் பூமிபால் அதுல்யதேஜ் என்ற 9-ம் ராமரின் உடல் புத்த மத சடங்குகளின் படி 2017 அக்டோபர் 26-ந் தேதி தகனம் செய்யப்பட்டுள்ளது.புதிய மன்னராக வஜிரலோங்கோன் முடி சூட்டப்படுகிறார். அவர் பத்தாம் ராமர் என்று அழைக்கப்படுவார்.


விளையாட்டு

1.டெல்லியில் நடைபெற்ற சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் உலகக் கோப்பை போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணி பிரிவில் இந்தியாவின் ஹீனா சித்து மற்றும் ஜிது ராய் ஜோடி தங்கம் வென்றுள்ளது.
2.2017-ம் ஆண்டுக்கான FIFA சிறந்த கால்பந்து வீரர் விருதை 5வது முறையாக போர்ச்சுக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்றுள்ளார். தொடர்ச்சியாக 2-வது முறையாக ரொனால்டோ இந்த விருதை கைப்பற்றியுள்ளார்.சிறந்த வீராங்கனையாக நெதர்லாந்தின் லைக் மார்டென்ஸ் தேர்வானார்.சிறந்த பயிற்சியாளர் விருதை ரியல் மாட்ரிட் பயிற்சியாளர் ஜிடேன் தட்டிச் சென்றார்.சிறந்த கோல் கீப்பர் விருது பிரான்சின் ஆலிவர் கிரவுடுக்கு வழங்கப்பட்டது.


இன்றைய தினம்

1.1890 – இலண்டனின் முதலாவது பாதாளத் தொடருந்து வழி அமைக்கப்பட்டது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு