இந்தியா

1.இந்தியாவின் முதல் விமான போக்குவரத்திற்கான பிரத்தியோக பல்கலைக்கழகமான இராஜீவ் காந்தி தேசிய விமான போக்குவரத்து பல்கலைக்கழகம் (Rajiv Gandhi National Aviation University (RGNAU)) உத்திரப்பிரதேச மாநிலம் ராய் பரேலியில் துவக்கப்படவுள்ளது.
2.ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் I Do What I Do என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.இந்த புத்தகம் செப்டம்பர் 2017ல் வெளிவர உள்ளது.
3.ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் Y.V. ரெட்டி Advice and Dissent : My Life in Public Service என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
4.சிறந்த புத்தாக்க சிந்தனைகளை (Best Innovative Minds) வழங்குபவர்களுக்கு ரூ.75,000 பரிசு வழங்கப்படும் என மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.இந்த பரிசு ஒவ்வொரு மாதமும் 1,000 நபர்களுக்கு வழங்கப்படும்.
5.மத்திய சட்ட அமைச்சகம் , National Legal Service Authority (NALSA) உடன் இணைந்து சாமானிய மக்கள் சட்ட ஆலோசனை பெறுவதற்கு ஏதுவாக தொலைபேசி மற்றும் காணொளி காட்சி வழியிலான Tele Law வசதியை பீகாரில் துவக்கியுள்ளது.இதற்கு கட்டணமாக ரூ.30 செலுத்த வேண்டும். வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்பவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.


உலகம்

1.அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தை மணிக்கு 210 கிலோ மீட்டர் வேகத்தில் ஹார்வே புயல் தாக்கியது.
2.தென்கொரியா மற்றும் அமெரிக்க படைகள் இணைந்து Exercise Ulchi Freedom Guardian 2017 என்ற பயிற்சியில் ஆகஸ்ட் 21 முதல் ஆகஸ்ட் 31 வரை ஈடுபட்டு வருகின்றன.பயிற்சி நடைபெறும் இடம் – Goyang (தென்கொரியா).
3.சிறுநீரை வைத்து பிளாஸ்டிக் தயாரிக்க நாசா புதிதாக திட்டமிட்டுள்ளது. சிறுநீருடன் ஈஸ்ட் மற்றும் கார்பண்டை ஆக்சைட் வைத்து இந்த பிளாஸ்டிக்கை நாசா தயாரிக்க உள்ளது. 3டி பிரிண்டர் மூலம் அதனை மூலப் பொருளாக பயன்படுத்தி புதிய பிளாஸ்டிக் பொருட்களை விண்வெளியில் தயாரிக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.விண்வெளிக்கு செல்லும் மனிதர்கள் தங்களுடைய சிறுநீரைக் கொண்டே பிளாஸ்டிக் தயாரித்துக்கொள்ளும் வகையில் இந்த தொழில்நுட்பம் பயன்பட உள்ளது.
4.சமீபத்தில் சீனாவின் தெற்கு பகுதியில் உள்ள கயங்கடாங் மாகாணத்தை ஹடோ புயல் தாக்கியது.
5.சீனா முதன்முறையாக வெளிநாட்டில் தனது ராணுவ படைத்தளத்தை உருவாக்கியுள்ளது.செங்கடல் பகுதியில் சூயஸ் கால்வாய்க்கு செல்லும் பகுதியில் எரித்திரியா , சோமாலியா மற்றும் எத்தியோபியா ஆகிய நாடுகளுக்கு அருகில் அமைந்துள்ள Djibouti என்ற நாட்டில் அமைத்துள்ளது.


இன்றைய தினம்

1.இன்று சர்வதேச அணு ஆயுத சோதனை எதிர்ப்பு தினம் (International Day Against Nuclear Test).
அணு ஆயுதம் முதன்முதலாக 1945ஆம் ஆண்டில் வீசப்பட்டது. அதன் பிறகு இதுவரை 2000 அணு ஆயுத சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதனால் கதிரியக்கமும், சுற்றுச்சூழலும், நாடுகளுக்கு இடையே பதற்றத்தையும் ஏற்படுத்துகிறது. இன்றைக்குள்ள அணு ஆயுதங்களைக் கொண்டு பூமியை 500 முறை அழிக்கலாம். ஆகவே இதன் விளைவுகள் பற்றியும் அதன் பரவலைத் தடுக்க ஐ.நா. சார்பில் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
2.இன்று தேசிய விளையாட்டு நாள் (Indian National Sports Day).
இந்தியாவின் சிறந்த ஹாக்கி வீரராக திகழ்ந்த தியான் சந்த்தைப் பெருமைப்படுத்தும் விதமாக அவரது பிறந்த நாளான ஆகஸ்ட் 29-ல் ஒவ்வொரு ஆண்டும் தேசிய விளையாட்டு நாள் கொண்டாடப்படுகிறது. இந்நாளின் முக்கிய நோக்கமானது நாட்டு மக்களிடம் ஆரோக்கியமான வாழ்க்கையை ஊக்குவிப்பதாகும். தேசிய விளையாட்டு நாளில் குடியரசுத் தலைவரால், விளையாட்டுகளில் சாதனை படைத்த வீரர்களுக்கு ராஜிவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா, மற்றும் துரோணாச்சாரியார் போன்ற விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. 2012-ல் முதன் முதலாக இந்திய அரசு, தியான் சந்த் பிறந்த நாளான ஆகஸ்ட் 29ஆம் நாளை, தேசிய விளையாட்டு நாளாக அறிவித்தது.

– தென்னகம்.காம் செய்தி குழு