தமிழகம்

1.மாநிலங்களவை உறுப்பினருக்கான ஓய்வூதியத் தொகை ரூ.20,000 பெற்று வந்த சரத்குமார் அதனை வேண்டாம் என விட்டுக் கொடுத்துள்ளார்.ஓய்வூதியத்தை விட்டுக்கொடுத்த முதல் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் என்ற பெருமையை நடிகர் சரத்குமார் பெற்றுள்ளார்.தற்போது 1952 முதல் ஓய்வுபெற்ற மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் அவர்களது குடும்பத்தார் என மொத்தம் 1,766 பேர் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர்.
2.ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும் கொசு ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


இந்தியா

1.ரூர்க்கி IIT ஆராய்ச்சியாளர்கள் பைப்பரஜைன் என்ற மருந்தை சிக்கன்குனியா வியாதியை குணமாக்க பயன்படுத்தி வெற்றியடைந்துள்ளனர்.பைப்பரஜைன் கிருமி தொற்றுகளை குணப்படுத்துவதற்கு பயன்படுத்தப் படுகிறது.பைப்பரஜைனில் உள்ள மூலக்கூறின் கிருமி எதிர்ப்பு நடவடிக்கை நோய்க்கிருமி பெருகுவதை தடுக்கிறது.
2.ராஜஸ்தான் மாநில பயங்கரவாத எதிர்ப்பு படை ( Anti terrorist squad ) சார்பில் போலியான ஆயுத உரிமம் மற்றும் அனுமதியற்ற ஆயுதம் வைத்துள்ளோருக்கு எதிராக தீவிர சோதனை நடத்தப்பட்டு , சட்ட விரோத ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.இந்த நடவடிக்கைகளுக்கு Operation Jubaida என பெயரிடப்பட்டுள்ளது.
3.நிதி ஆயோக் துணைத்தலைவர் ராஜிவ் குமார் தலைமையில் வடகிழக்கு மாநிலங்களின் நீர் மேலாண்மையை மேம்படுத்துவதற்கான பரிந்துரை மற்றும் செயல் திட்டங்களை வகுப்பதற்கான கமிட்டி நியமிக்கப்பட்டுள்ளது.
4.உ.பி. மாநில சமூக நலத்துறை சார்பில் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் மக்களுக்கு இலவச திருமணம் செய்விக்கும் Mukhyamantri Samoohik Vivaah Yojana துவக்கப்பட்டுள்ளது.உ.பி. அரசின் சார்பில் ஒவ்வொரு ஜோடிக்கும் ரூ.35,000 செலவழிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.


உலகம்

1.2017 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரிட்டனை சேர்ந்த கசுவோ இஷிகுரோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.இவர் ஜப்பானை பூர்வீகமாக கொண்டவர். இதுவரை 8 புத்தகங்கள் எழுதியுள்ளார்.1989ல் The Remains of the Day க்காக புக்கர் பரிசு பெற்றுள்ளார்.இஷிகுரோவின் சமீபத்திய நாவல், The Buried Giant (2015),இவரின் முதல் நாவல் — A Pale View of Hills (1982).
2.சார்க் நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் பாரளுமன்ற உறுப்பினர்களின் 8வது மாநாடு கொழும்புவில் நடைபெற்றுள்ளது.
3.பிப்ரவரி 2018ல் துபாயில் நடைபெறவுள்ள உலக அரசு மாநாட்டின் சிறப்பு விருந்தினர் நாடாக இந்தியா கலந்து கொள்கிறது
4.2017 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு, அணு ஆயுதங்களை தடை செய்ய கோரும் ICAN அமைப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.ICAN — International Campaign to Abolish Nuclear Weapons இதன் தலைமையகம் ஜெனீவாவில் உள்ளது.


இன்றைய தினம்

1.இன்று சர்வதேச கிராமப்புற பெண்கள் தினம் (International Day of Rural Women).
விவசாயத் துறையின் முதுகெலும்பாக விளங்குபவர்கள் கிராமப்புற பெண்களாவர். உலகின் வளர்ச்சிக்கு, கிராமப்புற பெண்களின் பங்களிப்பை மறக்க முடியாது. இவர்கள் கிராம வளர்ச்சிக்கும், உணவு பாதுகாப்பிற்கும், வறுமையை ஒழிப்பதற்கும் பாடுபடுகின்றனர். அதுதவிர நோய்வாய்ப்பட்ட முதியவர்கள் மற்றும் குழந்தைகளையும் பாதுகாக்கின்றனர். ஐ.நா.சபையானது 2008ஆம் ஆண்டிலிருந்து இத்தினத்தைக் கொண்டாடுகிறது.
2.உலக கைகழுவும் தினம் (Global Handwash Day).
முதன்முதலாக உலக கைகழுவும் தினம் 2008ஆம் ஆண்டு அக்டோபர் 15 அன்று கொண்டாடப்பட்டது. நம்மையும் அறியாமல் கைகளில் அசுத்தங்கள் இருக்கின்றன. இதில் பல்வேறு நோய்க்கிருமிகள் இருக்கின்றன. கைகளை நன்றாக கழுவாமல் சாப்பிடுவதால் வயிற்றுப்போக்கு, ஜலதோசம், வாந்தி, மயக்கம், குடல்புண் போன்ற பல நோய்கள் ஏற்படும். ஆகவே கைகளை சோப்பு போட்டு 30 வினாடியாவது கழுவ வேண்டும்.

 

–தென்னகம்.காம் செய்தி குழு