இந்தியா

1.2வது சர்வதேச யோகா திருவிழா மற்றும் சர்வதேச யோகா விளையாட்டு போட்டி – 2017 ஶ்ரீநகரில் நடைபெறுகிறது.
2.பெண் விவசாயிகளின் பல்வேறு விவசாய வளர்ச்சிக்கு வித்திட்ட புனேவைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் Swayam Shikshan Prayog (SSP) , 2017 UN Equator Prize பெற்றுள்ளது.
3.பெண்களால் அவர்களின் கணவர் மற்றும் கணவர் வீட்டார் மீது அளிக்கப்படும் புகார்கள் பற்றி விசாரிக்க இந்தியாவிலேயே முதன்மையாக திரிபுராவில் மாவட்ட அளவிலான குடும்ப நல குழு அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
4.நாட்டிலேயே முதன்மையாக கால்நடைகளுக்காக நடமாடும் மருந்தகங்களை தெலுங்கானா மாநில அரசு துவக்கியுள்ளது.
5.நவம்பரில் டெல்லியில் World Food India என்ற உணவுத் திருவிழா நடைபெறவுள்ளது.இதன் ஒரு பகுதியாக நடைபெற இருக்கின்ற Food Street என்ற நிகழ்வின் நல்லெண்ண தூதராக பிரபல சமயற்கலை நிபுணர் சஞ்சீவ் கபூர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
6.பொதுமக்கள் தங்கள் குறைகளை நேரடியாக முதல்வரிடம் தெரிவிக்க People First என்ற செயலியை ஆந்திரா முதல்வர் அறிமுகம் செய்துள்ளார்.
7.கடந்த ஏப்ரல் முதல் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட வங்கிகளின் காசோலைகள் செப்டம்பர் 30க்கு பின் செல்லாது எனவும்,இணைக்கப்பட்ட வங்கிகளின் IFSC code அனைத்தும் செப்டம்பர் 30ல் காலாவதி ஆகின்றன என அறிவிக்கப்பட்டுள்ளது.


உலகம்

1.நைஜீரியாவின் போகோ ஹரம் தீவிரவாதிகள் பிடியில் சிக்கியிருந்த 100க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகளை மீட்கும் பணியில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய நைஜீரிய வழக்கறிஞர் Zannah Mustaphaவுக்கு ஐ.நா.அகதிகள் ஆணையம் ( UNHCR ) ஐ.நா. நான்சென் அமைதி பரிசை வழங்கியுள்ளது.
2.ஐ.நா.மக்கட்தொகை நிதியம், 270 தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து குழந்தை திருமணத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தை துவக்கியுள்ளது.இதற்கென Bandhan Tod என்ற செயலியையும் பீகார் துணை முதல்வர் துவக்கி வைத்துள்ளார்.


இன்றைய தினம்

1.1971 – அரபுக் கூட்டமைப்பில் ஓமான் இணைந்து கொண்டது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு