இந்தியா

1.காஷ்மீர் விவகாரத்தில் தீர்வு காண மத்திய அரசு சார்பில் சிறப்பு அதிகாரியாக மத்திய உளவுத்துறையின் முன்னாள் இயக்குநர் தினேஷ்வர் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
2.கேரள சுயஉதவிக்குழு பெண்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க ” குடும்ப ஸ்ரீ பள்ளி ” என்ற திட்டத்தை அம்மாநில முதல்வர் துவக்கி வைத்துள்ளார்.
3.” விதான சவுதா ” என்றழைக்கப்படும் கர்நாடக மாநில சட்டசபையின் 60-வது ஆண்டு விழாவில் ( அக்டோபர் 24 ) ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்துகொள்ள உள்ளார்.
4.20வது சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழா ஹைதராபாத்தில் நவம்பர் 8 -14 வரை நடைபெறுகிறது.


உலகம்

1.நெதர்லாந்தில் 3.டி பிரிண்டிங் தொழில்நுட்பம் மூலம் ஸ்மார்ட் என்ற இடத்தில் பாலம் உருவாக்கப்பட்டுள்ளது.
2.இந்திய கடற்படையின் கடலோர கண்காணிப்புக்கு உதவும் வகையில் ஆயுதங்கள் பொருத்தப்படாத 22 கார்டியன் ரக அதிநவீன ஆளில்லாத விமானங்களை வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
3.இரண்டாவது உலக மார்க்சியம் மாநாடு , பீஜிங்கில் மே 2018ல் நடைபெற இருக்கிறது.இதன் கருப்பொருள் – Marxism and the current world and China ஆகும்.


விளையாட்டு

1.பெல்ஜியத்தின் அன்ட்வெர்ப் நகரில் நடைபெற்ற ஐரோப்பியன் ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் திவிஜ் சரண், அமெரிக்காவின் ஸ்காட் லிப்ஸ்கி ஜோடி, மெக்சிகோவின் சான்டிகோ கோன்சலஸ், சிலியின் ஜூலியோ பெரால்டா ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.


இன்றைய தினம்

1.1800 – வெள்ளை மாளிகையில் குடியேறிய முதலாவது அமெரிக்க அரசுத்தலைவர் என்ற பெருமையை ஜான் ஆடம்ஸ் பெற்றார்.
2.2006 – பெங்களூர் நகரின் பெயர் பெங்களூரு என மாற்றப்பட்டது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு