தமிழகம்

1.கோவை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்ட சிஇஓ நியமனத்தில் விதிகள் மீறப்பட்டதாக தொடர் சர்ச்சைகள் ஏற்பட்டதால் அப்பதவியில் இருந்து முன்னாள் எம்எல்ஏ கே.பி.ராஜுவின் மகள் சுகன்யா ராஜினாமா செய்துள்ளார்.
2.வாகன ஓட்டிகள் ஓட்டுநர் உரிமம் ஆர்.சி.புத்தகம், காப்பீட்டுச் சான்றிதழ் ஆகியவற்றின் அசல் ஆவணங்களை வாகனத்திலேயே வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.இந்த நடைமுறை செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
3.தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் ஆர்.முத்துகுமாரசாமி (அட்வகேட் ஜெனரல்) தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.


இந்தியா

1.வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் முன்னோடி திட்டமாக Regional Passport Office (RPO), Protector of Emigrants (PoE) office,Branch Secretariat ,Regional Office of ICCR ஆகிய நான்கு அலுவலங்களை ஒன்றிணைத்து Videsh Bhavan என்ற அலுவலகத்தை மும்பையில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் துவக்கி வைத்துள்ளார்.
2.விவசாய மற்றும் கடல் சார் உற்பத்தி பொருட்களை பதப்படுத்துதல் மற்றும் தொழிற்கூடங்களை உருவாக்க SAMPADA என்ற திட்டம் மத்திய அரசின் சார்பில் கடந்த ஆண்டு துவங்கப்பட்டது .தற்போது இந்த திட்டம் Pradhan Mantri Kisan Sampada Yojana (PMKSY) என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
3.மலேரியா நோயை கட்டுப்படுத்த ஓடிஸா மாநில அரசு மீண்டும் DAMON – Durgama Anchalare Malaria Nirakaran என்ற திட்டத்தை துவக்கியுள்ளது.
4.மத்திய அரசு 08 கேரட் அளவுக்கும் குறைவாக, 22 கேரட் அளவுக்கும் மேற்பட்ட தங்க ஆபரணங்களை ஏற்றுமதி செய்ய தடை விதித்துள்ளது.
5.தெலுங்கான மாநில அரசு மாணவர்களின் உடல் நலத்தை காக்க Rashtriya Bal Swasthya Karyakram என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.இந்த திட்டத்தில் மாணவர்களின் கண் சார்ந்த பிரச்சனைகளை கண்டறிவதற்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் Microsoft Intelligent Network for Eyecare (MINE) என்ற தொழில்நுட்ப உதவியை பயன்படுத்த ஒப்பந்தம் செய்துள்ளது.
6.விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைக்க செய்வதற்க்காக , கர்நாடகா அரசு மைக்ரோசாப்ட் உடன் இணைந்து “பண்ணை விலை முன்னறிவிப்பு மாதிரி”யை உருவாக்க ஒப்பந்தம் செய்துள்ளது.
7.உத்திர பிரதேச மாநில தூய்மை இந்தியா திட்டத்தின் நல்லெண்ண தூதராக பிரபல ஹிந்தி நடிகர் அக்ஷய் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
8.அகத்தியர் பிறந்த மார்கழி மாதம் ஆயில்ய நட்சத்திரம் வரும் நாளை ‘சித்தா தினமாக’ கொண்டாட மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.இதன் அடிப்படையில், வரும் ஜனவரி மாதம் 4-ம் தேதியன்று நாடு முழுவதும் தேசிய சித்தா தினம் கொண்டாடப்பட உள்ளது.ஒவ்வொரு ஆண்டும் நட்சத்திர தினம் மாறுபடும் என்பதால், ஆயில்ய நட்சத்திரம் வரும் நாளை அரசு அறிவிப்பின் அடிப்படையில் சித்தா தினம் கொண்டாடப்பட உள்ளது.இதுவரை தேசிய சித்தா தினம் முறையாக அறிவிக்கப்படாததால், ஆண்டுதோறும் ஜனவரி 14-ம் தேதி சித்தா தினமாக கொண்டாடப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.


உலகம்

1.சிறந்த நாவலுக்கான The Hugo Award – 2017, அமெரிக்க எழுத்தாளர் Nora K. Jemisin எழுதிய The Obelisk Gateஎன்ற நாவலுக்கு வழங்கப்பட்டுள்ளது.
2.மைக்ரோசாப்ட் நிறுவனம் நிகழ்கால செயற்கை நுண்ணறிவு ( real-time artificial intelligence ). திறன்பற்றி ஆராய்ந்து மேம்படுத்த Project Brainwave என்பதை துவக்கியுள்ளது.
3.HANDICAP INTERNATIONAL என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நல்லெண்ண தூதராக , பிரேசில் நாட்டின் புகழ் பெற்ற கால்பந்து வீரர் நெய்மர் நியமிக்கப்பட்டுள்ளார்.


விளையாட்டு

1.ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 23-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் அரையிறுதியில் இந்தியாவின் சாய்னா நேவல், ஜப்பானின் நொஜோமி ஒகுஹராவிடம் தோல்வியடைந்து வெண்கல பதக்கத்தை கைப்பற்றினார்.


இன்றைய தினம்

1.இன்று சர்வதேச காணாமற் போனோர் தினம் (International Day of Disappeared).
உலகின் பல நாடுகளிலும் காவல் துறையினராலோ அல்லது பாதுகாப்புப் படையினராலோ பல்வேறு காரணங்களால் கைது செய்யப்பட்டு காணாமல் போவோர் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் 1981ஆம் ஆண்டு இத்தினம் தேர்ந்தெடுக்கப்பட்டது. ரகசியக் கைதுகளுக்கு எதிராக மனித உரிமை அமைப்புகள், செஞ்சிலுவைச் சங்கம் ஆகியன போராடுகின்றன.
2.1835 – ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரம் அமைக்கப்பட்டது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு