தமிழகம்

1.சென்னையிலுள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்தின் துணைத் தூதராக ராபர்ட் பர்ஜெஸ் பொறுப்பேற்றுள்ளார்.
2.பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவுக்கு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி T.S.ஸ்ரீதரை தலைவராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


இந்தியா

1.உத்திரபிரதேச மாநில அரசு சஹாரன்பூரில் இலவச உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்துக்கு ” பிரபு கீ ரசோய் (கடவுளின் சமையலறை) ” என பெயரிடப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் அளிக்கும் நன்கொடை உதவியால் தினசரி 300 பேருக்கு இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது.
2.சுப்ரீம் கோர்ட்டின் தற்போது தலைமை நீதிபதியாக பதவி வகித்து வரும் ஜே.எஸ். கேஹர் வரும் ஆகஸ்ட் 27-ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். புதிய (45வது) தலைமை நீதிபதியாக, மூத்த நீதிபதி தீபக் மிஸ்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ளது.இவர் அடுத்த ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி வரை இந்த பதவியை வகிப்பார்.
3.உலக தொழில் முனைவோர்கள் மாநாட்டை நவம்பர் 28-ந்தேதி ஐதராபாத்தில் இந்தியா நடத்த உள்ளது.
4.வயதானவர்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அவர்களால் தனியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற முடிவதில்லை. இதேபோல், விதவைகள் மற்றும் சமூகத்தில் கைவிடப்பட்டோரும் பாதிப்படைந்து வருகின்றனர். எனவே, அவர்களை தேடிச் சென்று சிகிச்சை அளிக்கும் வகையில் மொபைல் தெரபி வேன் வசதியை ஏற்படுத்த பீகார் மாநில அரசு முடிவு செய்து, பீகார் மாநிலத்தின் பாட்னா உள்பட 11 மாவட்டங்களுக்கு செல்லும் வகையில், மொபைல் தெரபி வேன்களை முதல் மந்திரி நிதிஷ்குமார் ஆகஸ்ட் 10-ஆம் தேதி தொடங்கி வைத்தார்.


உலகம்

1.இந்திய வம்சாவளியை சேர்ந்த திலிப் சவுகான், அமெரிக்காவின் நஸ்ஸாவ் நகர சிறுபான்மையினர் விவகார துணை தலைமை கணக்காயராக நியமனம் செய்யப்ட்டுள்ளார்.
2.நேபாளத்தில் மாதவிலக்கு பெண்களை வீட்டை விட்டு வெளியே அனுப்பினால் அவர்களுக்கு 3 மாதம் ஜெயில் தண்டனையும், 3 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
3.தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ஏசியானில் அங்கம் வகிக்கும் நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் பங்குபெற்ற பிராந்திய பாதுகாப்பு கூட்டம் பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரான மணிலாவில் ஆகஸ்ட் 07-ல் நடைபெற்று முடிவடைந்தது.
4.15-வது பிம்ஸ்டெக் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாடு நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நடைபெற்றது. இதில் வங்களதேசம், இந்தியா, மியான்மர், இலங்கை, தாய்லாந்து, பூடான், நேபாளம், ஆகிய 7 நாடுகள் அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.


இன்றைய தினம்

1.1821 – ஜார்விஸ் தீவு கண்டுபிடிக்கப்பட்டது.
2.இன்று ஜமைக்கா ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட் பிறந்த நாள்.இவர் பிறந்த தேதி 21 ஆகஸ்ட் 1986.

 

– தென்னகம்.காம் செய்தி குழு