இந்தியா

1.ஷார்ஜா மன்னர் சுல்தான் பின் முஹம்மது அல்-காசிமி-க்கு கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
2.மத்திய பிரதேச மாநிலத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் நீதித்துறையில் பணியாற்றுவோர்கள் இரண்டுக்கு மேல் பிள்ளை பெற்றால் அவர்களை பதவி நீக்கம் செய்யும் சட்டம் அமலில் உள்ளது.இந்த சட்டத்தை மீறி மூன்று குழந்தைகளை பெற்றடுத்த காரணத்தால், குவாலியர் கூடுதல் மாவட்ட பயிற்சி நீதிபதி மனோஜ்குமார், மற்றும் கபல்பூர் கூடுதல் மாவட்ட பயிற்சி நீதிபதி அஷ்ரப் அலி ஆகியோர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
3.இந்தியா — பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் எல்லை தாண்டி நடைபெறும் துப்பாக்கிச் சூட்டிற்கு பதிலடியாக இந்திய எல்லைக் காவல் படை ( BSF ) சார்பில் பாகிஸ்தான் படை அலுவலர் குடியிருப்புகள் மற்றும் முகாம்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படுகிறது.இதற்கு ஆபரேசன் அர்ஜூன் என பெயரிடப்பட்டுள்ளது.
4.கேரளா முதல்வர் வைத்த கோரிக்கையை ஏற்று கேரளாவிற்கு சுற்றுப்பயணம் வந்த ஷார்ஜா மன்னர் முகமது பின் அல் காஸ்மி, சிறிய அளவில் குற்றம் புரிந்ததற்காக தங்கள் நாட்டில் சிறையில் வாடும் 149 இந்தியர்களை விடுதலை செய்வதாக அறிவித்துள்ளார்.
5.பெங்களூரு மாநகராட்சியின் 51வது மேயராக காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆர். சம்பத்ராஜ் என்ற தமிழர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இதற்கு முன் மூன்று தமிழர்கள் பெங்களூரு மேயராக பணியாற்றியுள்ளனர்.01) 1950 – N. கேசவ அய்யங்கார்,02)1962 – V. S. கிருஷ்ண ஐயர்,03)1994- 95 – G. குப்புசாமி.
6.தூய்மை இந்தியா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு அக்டோபர் 02ல் மூன்று ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, தூய்மையை வலியுறுத்தும் Toilet: Ek Prem Katha என்னும் ஹிந்தி திரைப்படத்தை அனைத்து மத்திய அரசு மருத்துவமனைகளிலும் திரையிட வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
7.நாட்டிலேயே முதல் முறையாக, பசுக்களுக்கான சரணாலயம், மத்திய பிரதேசத்தின் ஆகர் – மால்வா மாவட்டத்தில் துவக்கப்பட்டுள்ளது.


உலகம்

1.இந்திய சுற்றுலாத்துறையின் சார்பில் Incredible India பிரச்சாரம் எகிப்து நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.


விளையாட்டு

1.FIFA U17 உலக கோப்பை கால்பந்து போட்டியின் அதிகாரபூர்வ பந்து அறிவிக்கப்பட்டுள்ளது.அதன் பெயர் – Krasava.இது ஒரு ரஷ்ய மொழி சொல். விளையாட்டு போட்டிகளில் ஒரு அழகான நிகழ்வுகள் நடைபெறும் போது ரஷ்யர்களால் உச்சரிக்கப்படும் சொல் இதுவாகும்.


இன்றைய தினம்

1.1870 – ரோம் இத்தாலியின் தலைநகரானது.

 

 

– தென்னகம்.காம் செய்தி குழு