தமிழகம்

1.திரையரங்குகளின் கட்டணங்களை 25 % உயர்த்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.


இந்தியா

1.உங்கள் விமானப்படையை அறிவோம் என்ற நிகழ்ச்சி அகமதாபாத்தில் நடைபெற்றுள்ளது.
2.ஆசியான் அமைப்பு மற்றும் இந்தியா இடையிலான நட்புறவு பேச்சுவார்த்தையின் 25ம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் முதன்முறையாக ஆசியான் – இந்தியா இசை நிகழ்ச்சியை அக்டோபர் 06 – 08 வரை புதுடெல்லியில் ஏற்பாடு செய்தது.இதன் கருப்பொருள் — Shared Values, Common Destiny ஆகும்.
3.கேரளாவில் திருவாங்கூர் தேவஸ்வம் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்க 62 பேரை கேரள தேவஸ்வம் ஆட்சேர்ப்பு வாரியம் பரிந்துரை செய்துள்ளது. இவர்களில் 26 பேர் முன்னேறிய வகுப்பினர். மீதி உள்ள 36 பேரில் 6 பேர் தலித்துகள்.அர்ச்சகர்களாக நியமிக்க தலித்துகளின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை.
4.காந்தியடிகளின் 148 வது பிறந்த தினத்தை முன்னிட்டு பீகார் முதல்வர், வரதட்சணை மற்றும் குழந்தை திருமணங்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தை துவக்கி வைத்துள்ளார்.மது ஒழிப்பிற்கு எதிராக ஜனவரி 21 / 2017 ல் நடைபெற்ற நீண்ட மனிதச்சங்கிலி போன்று வரதட்சணை மற்றும் குழந்தை திருமணங்களுக்கு எதிரான மனிதச்சங்கிலி ஜனவரி 21 / 2018 ல் நடைபெறும் என அறிவித்துள்ளார்.
5.மாதா அமிர்தானந்தமயி மடத்தின் சார்பில், நாடு முழுவதும் 5,000 கிராமங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் ஜீவாமிர்தம் திட்டத்தை ஜனாதிபதி துவக்கி வைத்துள்ளார்.
6.இந்திய மனித உரிமைகள் கவுன்சில் சார்பில் வழங்கப்படும் 2017 ” மனித சாதனையாளர் விருது ” சமூக ஆர்வலர் டி.எஸ். சலீம் அகமதுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.


விளையாட்டு

1.2018 ஜனவரியில் நியூசிலாந்தில் நடைபெறவுள்ள 12வது ICC 19 வயதுக்குட்பட்டோர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் நல்லெண்ண தூதராக நியூசிலாந்து வீரர் கோரி ஆண்டர்சன் ( Corey Anderson ) நியமிக்கப்பட்டுள்ளார்.
2.ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்த பிரசாந்த் சோப்ரா, பஞ்சாப் அணிக்கு எதிரான ரஞ்சி போட்டியில் தனது பிறந்த நாளன்று முச்சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.இதற்கு முன் முதல்தர போட்டிகளில் கோலின் கவுட்ரே மற்றும் ராமன் லம்பா ஆகியோர் தங்கள் பிறந்த நாளில் முச்சதம் அடித்துள்ளனர்.


இன்றைய தினம்

1.இன்று உலக உணவு தினம் (World Food Day).
உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு 1945ஆம் ஆண்டு அக்டோபர் 16 அன்று ஆரம்பிக்கப்பட்டது. உணவுப் பிரச்சினை, பசி, வறுமைக்கு எதிராக போராடுவதே இந்த அமைப்பின் குறிக்கோளாகும். உணவு இருந்தும் அது கிடைக்காமல் பலர் இறப்பதைக் கண்டு ஐ.நா. சபை வேதனையடைந்தது. மக்கள் அனைவருக்கும் உணவு கிடைக்கச் செய்ய வேண்டும் என்கிற நோக்கில் 1980இல் இத்தினத்தை அறிவித்தது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு