இந்தியா

1.600 கோடி செலவிலான புல்லட் ரயில் பயிற்சி மையம், வதோதராவில் உள்ள National Academy of Indian Railways (NAIR) வளாகத்தில் அமைக்கப்படவுள்ளது.National High-Speed Rail Corporation (NHSRC)ன் மேலாண் இயக்குநர் – அச்சல் கரே ( Achal Khare ) ஆவார்.
2.பாராளுமன்ற மக்களவை நெறிமுறை குழு தலைவராக பா.ஜனதா தலைவர் அத்வானியை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மீண்டும் நியமித்துள்ளார். குழுவின் மற்ற 14 உறுப்பினர்களும் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.தனிநபர் மசோதாக்கள் மற்றும் தீர்மானங்கள் தொடர்பான குழுவின் தலைவராக துணை சபாநாயகர் தம்பிதுரை நியமிக்கப்பட்டுள்ளார். அவர் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தை ஆராயும் குழுவின் தலைவராக மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
3.36வது தேசிய விளையாட்டு போட்டிகள் நவம்பர் 2017ல் கோவாவில் நடைபெறவுள்ளது.
4.United India Insurance (UII) நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராக M.நாகராஜ சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
5.Railway Catering and Tourism Corporation Limited (IRCTC) நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராக மகேந்திர பிரதாப் மால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
6.22வது Global Financial Centres Index வெளியிடப்பட்டுள்ளது. மும்பை 60வது இடம் பெற்றுள்ளது. லண்டன் முதலிடத்தில் உள்ளது.
7.கொல்கத்தா மற்றும் லக்னோ விமான நிலையங்களை விரிவாக்கம் செய்ய அமெரிக்க வர்த்தகம் மற்றும் வளர்ச்சி அமைப்பு , இந்திய விமான நிலைய ஆணையத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
8.ரயிலில் பயணம் செய்பவர்கள் அடையாளச்சான்றாக ஸ்மார்ட்போனில் எம்-ஆதார் காட்டினால் போதும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.


உலகம்

1.சீனா மற்றும் ரஷ்யா கடற்படைகள் இணைந்து இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக Joint Sea – 2017 பயிற்சியில் ஜப்பான் கடல் பகுதியில் ஈடுபட்டு வருகின்றன.இதற்கு முன் ஜூலையில் பால்டிக் கடல் பகுதியில் இருநாட்டு கடற்படைகளும் ஏற்கனவே பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.


இன்றைய தினம்

1.1690 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது செய்திப்பத்திரிகை (Publick Occurrences Both Foreign and Domestick) முதலும் கடைசித் தடவையாகவும் வெளிவந்தது. இது அரசினால் தடை செய்யப்பட்டது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு