இந்தியா

1.நாட்டிலேயே முதன்முறையாக ஐக்கிய அமீரகத்திற்கு (UAE) வேலைக்காக செல்பவர்களுக்கு நன்னடத்தைச் சான்றிதழ் வழங்கும் முறையை கேரளா தொடங்கியுள்ளது.
2.ஒடிசா மாநிலம் அருகே வங்க கடல் பகுதியில் உள்ள அப்துல் கலாம் தீவில் அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் ப்ரித்வி-2 ஏவுகணை நேற்று காலை 11.35 மணிக்கு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ப்ரித்வி-2 ஏவுகணை 500 லிருந்து 1000 கிலோ கிராம் எடையுள்ள அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது. மேலும் இந்த ஏவுகணை 350 கி.மீட்டர் தூரத்தில் உள்ள இலக்கை தாக்கி அளிக்கக்கூடியது.
3.அரசின் லோகோவுடன் கர்நாடக மாநிலத்துக்கு மஞ்சள், வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்கள் அடங்கிய தனி மூவர்ண கொடியை 9 பேர் கொண்ட குழு பரிந்துரைத்துள்ளது.


உலகம்

1.முதல்முறையாக விண்வெளியில் இயங்கி வரும் சர்வதேச விண்வெளி மையத்தில் பேட்மிண்டன் போட்டி நடைபெற்றது.இந்த போட்டியில் ரஷ்யா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் கலந்து கொண்டனர்.
2.அதிக வேகத்தில் செல்லும் உலகின் மிக சக்திவாய்ந்த ஃபெல்கான் ராக்கெட்டை கலிபோர்னியா மாகாணத்தில் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
3.பாகிஸ்தானில் முதல் முறையாக ‘செனட்’ உறுப்பினராக இந்துப்பெண் கிருஷ்ண குமாரி நியமிக்கப்பட்டுள்ளார்.


விளையாட்டு

1.தென் ஆப்ரிக்கா அணியுடனான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 124 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் 3-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.


இன்றைய தினம்

1.இன்று டிமிட்ரி மெண்டெலீவ் பிறந்த தினம் (Dmitry Mendeleev Birth Anniversary Day).
கனிம அட்டவணையின் தந்தை என மெண்டெலீவ் அழைக்கப்படுகிறார். இவர் 1834ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் நாள் ரஷ்யாவில் பிறந்தார். இவர் வேதியியல் தனிமங்களை அவற்றின் பண்புகளின் அடிப்படையில் வரிசைப்படுத்தாமல், தனிமங்களின் அணு நிறையை அடிப்படையாகக்கொண்டு ஆவர்த்தன அட்டவணையை உருவாக்கினார். இதனை மார்ச் 6, 1869இல் ரஷ்ய வேதியியல் கழகத்தில் சமர்ப்பித்தார்.

 

–தென்னகம்.காம் செய்தி குழு