இந்தியா

1.திட்டம் 28 ( கமோத்ரா வகை ) கீழ் இந்தியாவில் உருவாக்கப்பட்ட INS கில்டன் போர்க்கப்பல், விசாகப்பட்டினத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கிழக்கு கடற்படையில்
அக்டோபர் 15ல் இணைக்கப்பட்டுள்ளது.கார்பன் பைபர் கூட்டு பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள நாட்டின் முதல் முக்கிய போர்க்கப்பல் என்ற பெயர் இதற்குக் கிடைத்துள்ளது.
2.மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சார்பில், சென்னையில் உள்ள IIT வளாகத்தில் தேசிய எரிதிறன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் { National Centre for Combustion Research and Development — NCCRD } துவங்கப்பட்டுள்ளது.
3.இந்தியா – இலங்கை ராணுவங்கள் இணைந்து மேற்கொள்ளும் 5வது மித்ரா சக்தி – 2017 பயிற்சி, புனேவில் உள்ள ராணுவ மையத்தில் அக்டோபர் 13 -25 வரை நடைபெறுகிறது.
4.இந்தியாவில் முதன்முறையாக கலப்பின முறையிலானா கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் ( Sewage Treatment Plant (STP) under Hybrid Annuity Mode ) உத்திரபிரதேசத்தின் ஹரித்வார் மற்றும் வாரணாசியில் அமைக்கப்பட உள்ளது.
5.2019 மார்ச்க்குள் 6 கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு டிஜிட்டல் கல்வியறிவை ஏற்படுத்த , Pradhan Mantri Gramin Digital Saksharta Abhiyan (PMGDISHA) என்ற திட்டத்தை பிரதமர் மோடி காந்திநகரில் அக்டோபர் 09ல் துவக்கி வைத்துள்ளார்.


உலகம்

1.அமெரிக்காவுடன் இணைந்து பங்களாதேஷின் ராணுவம் மற்றும் 130க்கும் மேற்பட்ட பல்வேறு துறைகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் டாக்காவில் பேரிடர் தணிப்பு பயிற்சியில் அக்டோபர் 08 – 11 வரை ஈடுபட்டுள்ளன.
2.இந்தியா மற்றும் ஜப்பான் கடற்படை பயிற்சி Passage Exercise (PASSEX), அக்டோபர் 12 – 15 வரை ஜப்பானில் நடைபெற்றுள்ளது. இதில் இந்தியா சார்பில் INS Satpura INS Kadmatt கப்பல்கள் பங்கு பெற்றுள்ளன.


இன்றைய தினம்

1.1947 – காஷ்மீர் பிரச்சினை தொடங்கியது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு