தமிழகம்

1.சென்னையில் கொசுக்களை ஒழிக்கும் வகையில் கொசு இல்லா இல்லம் என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது.
2.உள்நாட்டு கடல் வாணிபத்தில் சிறந்து விளங்கியதற்காக தூத்துக்குடி துறைமுகத்துக்குச் சிறந்த துறைமுக விருதை மத்திய அரசு வழங்கியுள்ளது.
3.ராமநாதபுரம் மாவட்டம் அருகே போகலூரில் புதிய கற்காலத்தைச் சேர்ந்த 5000 ஆண்டுகள் பழமையான கற்கோடரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இந்தியா

1.பொதுத்துறை நிறுவனமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தின் ( ONGC ) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக சஷி சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
2.ஆக்சிஸ் வங்கி ஜம்மு & காஷ்மீரின் லே பகுதியில் பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு ( CSR ) அடிப்படையில் ‘ஆக்சிஸ் தில் சே’ எனும் பள்ளிகள் மேம்பாட்டு நடவடிக்கையை துவக்கியுள்ளது.
3.மூன்றாவது இந்தியா, சர்வதேச அறிவியல் திருவிழா 2017 – சென்னையில் அக்டோபர் 13 -16 வரை நடைபெறுகிறது.
4.ஸ்ரீநகர் மாநகராட்சியின் தூய்மை இந்தியா திட்ட தூதராக, பிலால் அஹ்மத் தார் என்ற 12 வயது சிறுவன் நியமனம் செய்யப்பட்டுள்ளான்.
5.புதுடெல்லியில் நடைபெற்ற குழந்தை தொழிலார் ஒழிப்பு கருத்தரங்கில், மத்திய உள்துறை அமைச்சர் பென்சில் என்னும் இணையவலை அமைப்பை தொடங்கி வைத்துள்ளர்.
6.திவ்யங் என்று அழைக்கப்படும் மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்காக மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் Divyang Sarathi என்ற செயலியை வெளியிட்டுள்ளார்.
7.உ.பி. பெண் போலீஸ் அதிகாரி அபர்ணா குமார், உலகின் 8-வது பெரிய மலைச்சிகரமான மனஸ்லு சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண் என்ற சாதனையை படைத்துள்ளார்.
8.தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகம் வழங்கும், 2017ம் ஆண்டுக்கான சாஸ்த்ரா – ராமனுஜன் விருது சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள சுவிஸ் பெடரல் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலாஜியைச் சேர்ந்த முனைவர் மரினா வியசோவ்ஸ்காவுக்கு வழங்கப்பட்டுள்ளது.


உலகம்

1.நான்காம் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு வரும் நவம்பர் 15-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை டர்பனில் நடக்க இருக்கிறது.உலகத் தமிழர்களை ஒன்றிணைத்து இதன் மூலம் பொருளாதார வாய்ப்புகள் குறித்து விவாதிப்பதற்காக இந்த மாநாடு நடத்தப்படுகிறது.2009-ம் ஆண்டு இந்த மாநாடு முதல் முறையாக சென்னையில் நடத்தப்பட்டது. 2011-ம் ஆண்டு துபாயிலும் மற்றும் 2016-ம் ஆண்டு சென்னையிலும் நடந்தது.
2.சவுதி அரேபியப் பெண்கள் கார் ஓட்ட, அந்நாட்டு அரசு அனுமதியளித்துள்ளது. 2018-ம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து இது அமலுக்கு வரவிருக்கிறது.


இன்றைய தினம்

1.இன்று உலக ஆசிரியர்கள் தினம் (World Teacher’s Day).
ஒரு சிறந்த சமூகத்தை திறமையான ஆசிரியரால் உருவாக்க முடியும். உலகம் முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்காக சர்வதேச ஆசிரியர் கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க யுனெஸ்கோ 1994ஆம் ஆண்டில் அக்டோபர் 5 ஐ உலக ஆசிரியர் தினமாக அறிவித்தது. ஒரு நல்ல சமூகத்தை படைக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன் இத்தினம் கொண்டாடப்படுகிறது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு