இந்தியா

1.நாட்டின் 13-வது துணை ஜனாதிபதியாக வெங்கைய்யா நாயுடு நேற்று பதவியேற்றுக்கொண்டார்.அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
2.மத்திய திரைப்பட தணிக்கை வாரிய தலைவர் பதவியில் இருந்து பஹ்லாஜ் நிஹலானி நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக பிரபல பாடலாசிரியர் பரசூன் ஜோஷி தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
3.ஏர் இந்தியா விமானங்களில் உணவு திருடினால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் அஷ்வனி லோஹானி தெரிவித்துள்ளார்.
4.கோயம்புத்தூர்-பெங்களூரு இடையே டபுள் டெக்கர் ரயில் சோதனை ஓட்டம் நேற்று வெற்றிகரமாக நடைபெற்றது.


உலகம்

1.உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற உலகின் அதிக வயதான நபரான இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டல், தனது 113 வயதில் காலமானார்.


வர்த்தகம்

1.நிசான் நிறுவனம் தனது கார்களில் வாடிக்கையாளர்களின் வசதிக்காக ஸ்மார்ட்போனுடன் இணைந்த வசதியை ‘நிசான் கனெக்ட்’ என்ற பெயரில் உருவாக்கியுள்ளது.


விளையாட்டு

1.லண்டனில் நடைபெறும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவர் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் தேவிந்தர் சிங் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.இந்தியர் ஒருவர் இறுதி போட்டிக்கு முன்னேறுவது இதுவே முதல் முறையாகும்.


இன்றைய தினம்

1.இன்று சர்வதேச இளைஞர் தினம் (International Youth Day).
இளைஞர்களுக்கு இருக்கும் பிரச்சினைகளைக் கண்டறிந்து அவற்றைக் களைவது, அவர்களை சக்தி படைத்தவர்களாக மாற்ற வேண்டும் என்கிற பார்வை 1995ஆம் ஆண்டில் ஐ.நா. சபையின் கவனத்திற்கு வந்தது. ஆகஸ்டு 12 ஐ சர்வதேச இளைஞர் தினமாக 1998ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. இளைஞர்களின் பிரச்சினையைக் கண்டறிந்து, அதனை களைந்து அவர்களின் சக்தியை நாட்டு வளர்ச்சிக்குப் பயன்படுத்துவதே இத்தினத்தின் நோக்கமாகும்.
2.இன்று உலக யானைகள் தினம் (World Elephant Day).
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி உலக யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது.இந்த நாள் கொண்டாடப்படுவதன் நோக்கம் யானைகளை பாதுகாப்பதே ஆகும்.இன்றைக்கு உலகத்தில் உள்ள 65 அமைப்புகள் மற்றும் யானைகளை கொண்ட நாடுகள் இந்த தினத்தை கொண்டாடி வருகின்றன.இந்த தினத்தில் தனியார் வளர்க்கும் யானைகளை பாதுகாப்பதும் ஒரு நோக்கமாகும்.முதன் முதலில் இந்த தினம் 2012 ஆகஸ்டு 12ல் கொண்டாட ஆரம்பிக்கப்பட்டது.’வனத்திற்குள் திரும்பு’ என்ற ஆங்கிலப் படத்தை வில்லியம் சாட்னர் என்பவர் எடுத்தார். இந்த படத்தின் கதையே ஒரு தனியார் வளர்க்கும் யானையை, காட்டிற்குள் மீண்டும் விடுவது பற்றியது. இந்த படம் 2012 ஆகஸ்டு 12ல் வெளியானது. அன்றைய தினம் முதல் ‘உலக யானைகள் தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது.
3.1851 – ஐசாக் சிங்கர் தனது தையல் இயந்திரத்துக்கான காப்புரிமம் பெற்றார்.
4.1981 – ஐபிஎம் தனி மேசைக் கணினி வெளியிடப்பட்டது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு