தமிழகம்

1.சென்னை தினம் கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி கொண்டாடப்பட்டது.இது 378வது சென்னை தினம் ஆகும்.


இந்தியா

1.தனி மனித ரகசிய காப்புரிமை அடிப்படை உரிமையே என்று உச்சநீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு ஆதார் வழக்கில் மத்திய அரசுக்கு எதிராக நேற்று தீர்ப்பு அளித்துள்ளது. இந்த அமர்வில் நீதிபதிகள் ரோஹிண்டன் பாலி நாரிமன், சஞ்சய் கிஷன் கவுல், அபய் மனோகர் சப்ரே, சந்திரசூட், அப்துல் நசீர், எஸ்.ஏ.பாப்டே, ஆர்.கே.அகர்வால், ஜே.செல்லமேஸ்வர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.இவர்களுக்கு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமை வகித்தார்.
2.இன்று முதல் புதிய 200 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்திற்கு வரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.இந்த நோட்டு பிரகாசமான மஞ்சள் நிறத்தில் அச்சிடப்பட்டு உள்ளது.
3.மழை மேகங்களை செயற்கை முறையில் உருவாக்க வர்ஷதாரி என்ற திட்டத்தை கர்நாடகா அரசு துவக்கியுள்ளது.இத்திட்டத்தின் படி சிறிய ரக BQ-100 Beechcraft விமானம் மூலம் சில்வர் அயோடைடு , சோடியம் குளோரைடு மற்றும் பொட்டாஷியம் குளோரைடு கலவை வானில் தெளிக்கப்படுகிறது.
4.செயற்கை முறை கருத்தரிப்பு சிகிச்சை (In Vitro Fertilisation (IVF) முறையில் இந்தியாவிலேயே முதன் முறையில் கன்றுக் குட்டி புனேவில் பிறந்துள்ளது. அதற்கு விஜய் என பெயரிட்டுள்ளனர்.
5.தீபாவளி முடிவடைந்த பின் ஏற்படும் கடுமையான சுற்றுச்சூழல் சீர்கேடு பற்றிய விழிப்புணர்வை குழந்தைகளிடம் ஏற்படுத்த மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவ நிலை மாற்றம் துறை அமைச்சகம் Harit Diwali, Swasth Diwali என்ற பிரச்சாரத்தை ஏற்பாடு செய்துள்ளது.
6.இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், மின்னணு சுங்க வரி வசூலிப்பதற்காக MyFASTag மற்றும் FASTag Partner எனும் செயலிகளை அறிமுகம் செய்துள்ளது.
7.Madhyamik and Uchchtar Shiksha Kosh (MUSK) என்ற புதிய வரிமேல் வரி (Cess) விதிக்க மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.இதில் வசூலாகும் தொகை கல்வி தொடர்பான திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


உலகம்

1.பிரிட்டன் விஞ்ஞானிகள் குழு , அறுவைச்சிகிச்சைகளில் பயன்படக் கூடிய உலகின் மிகச்சிறிய Versius என்ற இயந்திர மனிதனை உருவாக்கியுள்ளனர்.இதனை குடல் இறக்கம் சீரமைப்பு, கண், காது, மூக்கு, தொண்டை உள்ளிட்ட ஆபரேசன் செய்ய பயன்படுத்த முடியும்.
2.சீனா தங்கள் நாட்டின் முதல் இணைய நீதிமன்றத்தை (Cyber Court) Hangzhou நகரில் அமைத்துள்ளது.
3.அமெரிக்கா 3ம் தலைமுறை TDRS – M (Tracking and Data Relay Satellite – M ) என்ற செயற்கைகோளை விண்ணில் செலுத்தியுள்ளது.TDRS – A முதல் G வரை – முதல் தலைமுறை ஆகும்.TDRS – H முதல் J வரை இரண்டாம் தலைமுறை ஆகும்.TDRS – K முதல் M வரை மூன்றாம் தலைமுறை ஆகும்.


இன்றைய தினம்

1.1912 – சீனத் தேசியவாதிகளின் குவாமிங்தாங் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு