தமிழகம்

1.குழந்தைகள் பிறப்பு விகிதத்தில், தமிழகத்திலேயே, வேலுார் மாவட்டம் முதலிடம் வகிக்கிறது.மாநில அளவில் குழந்தை பிறப்பு விகிதம் சராசரியாக 7.3 சதவீதமாகவும் , வேலூர் மாவட்டத்தில் மட்டும், 12.5 சதவீதமாகவும் உள்ளது.


இந்தியா

1.இயற்கை வேளாண்மை மற்றும் இயற்கை உணவு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பெண்களை ஊக்குவிக்கும் விதமான 3rd Women Of India Organic Festival என்ற கண்காட்சி, புதுடெல்லியில் அக்டோபர் 01 – 15 வரை நடைபெற உள்ளது.
2.புகழ் பெற்ற பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் தலைமை செயல் அலுவலராக ( Chief Procter ) பேராசிரியர். ரோயனா சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.பெண் ஒருவர் இந்த பதவியில் நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதன்முறையாகும்.
3.இந்தியாவில் சிசு மரணம் 8% அளவுக்கு குறைந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.2015ல் 1000 குழந்தைகள் பிறந்தால் ஒரு வயதுக்குள் 37 குழந்தைகள் இறக்க நேரிட்டது.2016ல் 1000 குழந்தைகளுக்கு 34 குழந்தைகள் என்ற அளவில் இறப்பு விகிதம் குறைந்துள்ளது.
4.ரயில் விபத்துகளை தடுக்க இஸ்ரோ தொழில்நுட்பத்தை பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
5.இஸ்ரேலிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, வெண்மை புரட்சியை ஏற்படுத்த ஹரியானா மாநில அரசு இஸ்ரேல் அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
6.அசாம் மாநிலம் குவாஹாட்டியை சேர்ந்த நஸ்ரூதின் அகமது தலைமையிலான குழுவினர் உலகின் மிக உயரமான ( 101 அடி ) மூங்கில் துர்கா சிலையை உருவாக்கியுள்ளனர். இந்த சிலை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற உள்ளது.இதில் பிளாஸ்டிக்கையோ உலோகத்தையோ பயன்படுத்தவில்லை. சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூங்கில் கம்புகளை மட்டுமே உபயோகித்துள்ளனர்.
7.மகாராஷ்டிரா அரசு வழங்கும் 2017-18ம் ஆண்டுக்கான பாரதரத்னா பண்டிட் பீம்சென் ஜோஷி விருது, பிரபல வாய்ப்பாட்டு கலைஞர் மாணிக் பிடேவுக்கு ( Manik Bhide ) வழங்கப்பட்டுள்ளது.


உலகம்

1.தாய்லாந்து பிரதமராக இருந்த யிங்லக் ஷினவத்ரா மீது, விவசாயிகளுக்கான அரிசி மானிய திட்டத்தில் அலட்சியமாக செயல்பட்டதால், அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


இன்றைய தினம்

1.இன்று உலக அஞ்சல் தினம் (World Post Day).
உலகத் தபால் யூனியன் என்பது 1874ஆம் ஆண்டு அக்டோபர் 9 இல் ஆரம்பிக்கப்பட்டது. இதனால் உலகம் முழுவதும் தபால் போக்குவரத்திற்கான ஒப்பந்தம் ஏற்பட்டது. உலகத் தபால் யூனியனின் மாநாடு 1969ஆம் ஆண்டு டோக்கியாவில் நடைபெற்றது. இதில் உலக அஞ்சல் தினத்தை அக்டோபர் 9 அன்று கொண்டாடுவது என மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.
2.1835 – கொழும்பு ரோயல் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.
3.1981 – பிரான்சில் மரணதண்டனை நிறுத்தப்பட்டது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு