தமிழகம்

1.தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் ஃபாஸ்டேக் பயன்படுத்தும் வாகனங்களுக்கான பாதை அமைப்பதற்கு அதிகாரிகள்  நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளனர்.ஃபாஸ்டேக் வில்லைகள் அனைத்து வாகனங்களிலும் டிசம்பர் மாதத்துக்குள் கட்டாயமாக ஒட்ட வேண்டும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அண்மையில் தெரிவித்திருந்தார்.

2.சென்னைக்குள் 25 மீட்டருக்கு ஒரு கண்காணிப்பு கேமரா பொருத்துவது என பெருநகர காவல்துறை அடுத்த இலக்கு நிர்ணயித்து, செயல்படத் தொடங்கியுள்ளது.


இந்தியா

1.தெலங்கானாவில் முதல்வர் சந்திரசேகர் ராவ் தலைமையிலான அமைச்சரவை ஞாயிற்றுக்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டது. அவரது மகன் கே.டி.ராம ராவ், உறவினர் டி.ஹரீஷ் ராவ் உள்பட 6 பேர் புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர்.

2.தெலங்கானா மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராக தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை செளந்தரராஜன்  பதவியேற்றுக் கொண்டார்.

3.நிலவின் பரப்பில் லேண்டர் இருக்குமிடத்தை, நிலவைச் சுற்றிவந்து ஆய்வு செய்துகொண்டிருக்கும் சந்திரயான்-2 ஆர்பிட்டர் படம் பிடித்தது.இதையடுத்து அதனுடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்துவதற்கான முயற்சியை விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர்.


வர்த்தகம்

1.வாகன உதிரி பாக தயாரிப்பு நிறு வனங்கள், எலக்ட்ரானிக்ஸ் பாகங்கள் உட்பட வாகனங்களுக்கு தேவையான முக்கிய பாகங்களை இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும் என்று மாருதி சுஸூகி நிறுவனத்தின் இந்தியப் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி கெனிச்சி அயுக்வா வலியுறுத்தி உள்ளார்.


உலகம்

1.ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்பின் இடைக்காலத் தலைவர் கார்னெல் ஃபெரூடா ஈரானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

2.பிரெக்ஸிட் விவகாரத்தில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸனின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது அமைச்சரவையிலிருந்து மூத்த அமைச்சர் ஆம்பெர் ரூட் விலகியுள்ளார்.

3.ஐஸ்லாந்து, ஸ்விட்சர்லாந்து, ஸ்லோவேனியா ஆகிய 3 நாடுகளுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஞாயிற்றுக்கிழமை அரசு முறை பயணமாகப் புறப்பட்டார்.


விளையாட்டு

1.யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டி இறுதிச் சுற்றில்  செரீனாவை வீழ்த்தி முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று வரலாறு படைத்தார் கனடாவின் 19 வயது இளம் வீராங்கனை பியான்கா ஆன்ட்ரிஸ்கு.


ன்றைய தினம்

  • உலக முதலுதவி தினம்
  • வட கொரியா குடியரசு தினம்(1948)
  • ஜான் ஹோர்ச்செல் தனது முதலாவது ஒளிப்படத்தை கண்ணாடித் தட்டில் எடுத்தார்(1839)
  • கலிபோர்னியா, 31வது மாநிலமாக அமெரிக்காவில் இணைந்தது(1850)
  • அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி., எனப் பெயரிடப்பட்டது(1791)

– தென்னகம்.காம் செய்தி குழு