தமிழகம்

1.தமிழகம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்ற லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 74,971 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு, பயனாளிகளுக்கு ரூ. 179 கோடியே 35 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

2.பொது விநியோகத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 6 கோடியே 73 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர் என தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் தெரிவித்தார்.


இந்தியா

1.உலக அளவில் கடந்த 2017 -ஆம் ஆண்டில் அதிகமாக விமான பயணம் மேற்கொண்டவர்களில் இந்தியர்கள் 3 வது இடம் பிடித்துள்ளனர்.அதிகபட்சமாக அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர்கள் 63 கோடியே 2 லட்சம் பேரும், சீனர்கள் 55 கோடியே 5 லட்சம் பேரும், இந்தியர்கள் 16 கோடியே 1 லட்சம் பேரும், இங்கிலாந்தை சேர்ந்தவர்கள் 14 கோடியே 7 லட்சம் பேரும், ஜெர்மனியர்கள் 11 கோடியே 4 லட்சம் பேரும் விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.

2.அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலை கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா தலைமையில் சந்திப்பதற்கு பாஜக உயர் நிலைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.


வர்த்தகம்

1.அந்நியச் செலாவணி கையிருப்பு 119 கோடி டாலர் குறைந்து 40,010 கோடி டாலராக (சுமார் ரூ.27.60 லட்சம் கோடி) சரிவடைந்துள்ளது.

2.ஆக்ஸிஸ் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்புக்கு அமிதாப் சௌத்ரியை  நியமனம் செய்துள்ளதாக அந்த வங்கி தெரிவித்துள்ளது.

3.இந்தியாவில் ஆண்டுக்கு ரூ. 1.20 லட்சம் கோடி மதிப்பிலான மருந்துகள் தயாரிக்கப்பட்டு, அதில் ரூ. 60,000 கோடி மதிப்பிலான தடுப்பு மருந்துகள் 200 வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக, இந்திய பார்மஸி கவுன்சில் தலைவர் சுரேஷ் தெரிவித்தார்.


உலகம்

1.இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகளுக்கான மானியத்தை அமெரிக்கா நிறுத்த விரும்புகிறது என்று அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.


விளையாட்டு

1.ஹைதராபாத் ஓபன் பாட்மிண்டன் போட்டி இறுதிச் சுற்றுக்கு இந்திய வீரர் சமீர் வர்மா தகுதி பெற்றுள்ளார்.

2.யுஎஸ் ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் ஜோகோவிச்-டெல்பொட்ரோ மோதுகின்றனர். அதே நேரத்தில் உலகின் முதல்நிலை வீரர் ரபேல் நடால் காயம் காரணமாக விலகினார்.

3.ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவின் அங்குர் மிட்டல் டபுள் டிராப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.


ன்றைய தினம்

  • உலக முதலுதவி தினம்
  • வட கொரியா குடியரசு தினம்(1948)
  • ஜான் ஹோர்ச்செல் தனது முதலாவது ஒளிப்படத்தை கண்ணாடித் தட்டில் எடுத்தார்(1839)
  • கலிபோர்னியா, 31வது மாநிலமாக அமெரிக்காவில் இணைந்தது(1850)
  • அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி., எனப் பெயரிடப்பட்டது(1791)
  • தென்னகம்.காம் செய்தி குழு