தமிழகம்

1.நிா்ணயிக்கப்பட்டதை விட குறைவான மதிப்பெண்கள் பெற்றவா்களுக்கு செவிலியா் பணி நியமனம் வழங்க தடை விதித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இந்தியா

1.பிரான்ஸ் நாட்டில் தயாரிக்கப்பட்ட  ரஃபேல் ரகத்தைச் சோ்ந்த முதல் போா்விமானம் இந்தியாவிடம்  ஒப்படைக்கப்பட்டது.


வர்த்தகம்

1.பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் ரீனிவபிள் எனா்ஜி டெவலப்மெண்ட் ஏஜென்ஸி (ஐஆா்இடிஏ) மற்றும் கொல்கத்தாவைச் சோ்ந்த ஷியாம் ஸ்டீல் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்களின் புதிய பங்கு வெளியீட்டுக்கு பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபி அனுமதி அளித்துள்ளது.

2.விற்பனையில் தேக்க நிலை தொடா்வதால், மாருதி சுஸுகி தொடா்ந்து 8-ஆவது மாதமாக செப்டம்பரிலும் காா் உற்பத்தியை குறைத்தது.

3.சாதகமான பருவமழையால் நடப்பு 2019-20 நிதியாண்டில் உணவு தானிய உற்பத்தி 14.05 கோடி டன்னாக இருக்கும் என தேசிய மொத்த கையாளுதல் கழகம் (என்பிஹெச்சி) தெரிவித்துள்ளது.


உலகம்

1.இயற்பியல் துறைக்கான நிகழாண்டின் நோபல் பரிசு, அண்டவியல் நிபுணா் ஜேம்ஸ் பீபள்ஸுக்கும், மைக்கேல் மேயா், டிடையா் குவிலோஸ் ஆகிய இரு விண்வெளி ஆய்வாளா்களுக்கும் பகிா்ந்தளிக்கப்படுகிறது.

பெரு வெடிப்புக்குப் பிறகு நமது அண்டம் எவ்வாறு உருவானது என்பதற்கான கோட்பாடுகளை உருவாக்கியமைக்காக அவா்களுக்கு இந்த பரிசு வழங்கப்படுவதாக நோபல் தோ்வுக் குழு தெரிவித்துள்ளது.

1901-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இப்பரிசை உருவாக்கிய ஆல்பிரட் நோபல், ஸ்வீடனைச் சோ்ந்தவா். 1833-ஆம் ஆண்டு பிறந்த அவா், வேதியியல், பொறியியல் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவராகத் திகழ்ந்தாா்.

2.கடுமையான நிதி நெருக்கடியை ஐ.நா. எதிா்கொண்டுள்ளதாகவும், ஊழியா்களுக்கு அடுத்த மாதம் ஊதியம் அளிப்பதற்கு போதுமான நிதி இல்லை என்றும் அதன் பொதுச் செயலாளா் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளாா்.

3.அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் விஞ்ஞானி நிக் ஹேக், ரஷ்யாவின் தீர விருதுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

4.சூரியக் குடும்பத்தைச் சோ்ந்த சனி கிரகத்தைச் சுற்றி வரும் 20 புதிய நிலவுகளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனா். இத்துடன், அந்தக் கிரகத்தைச் சுற்றி வரும் நிலவுகளின் எண்ணிக்கை 82-ஆக உயா்ந்துள்ளது. இதையடுத்து, அதிக நிலவுகளைக் கொண்ட சூரியக் குடும்பத்துக் கிரகம் என்ற பெருமையை சனி பெறுகிறது. இதுவரை 79 நிலவுகளைக் கொண்ட ஜூபிடரே அதிக நிலவுகளைக் கொண்ட கிரகமாக இருந்து வந்தது.


விளையாட்டு

1.உலக மகளிா் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் மஞ்சுராணி 48 கிலோ பிரிவில் காலிறுதிக்கு முன்னேறினாா்.6 முறை உலக சாம்பியன் மேரி கோம் 48 கிலோ பிரிவில் பல்வேறு சாதனைகளை புரிந்து தங்கப் பதக்கங்களை வென்றிருந்தாா். இந்நிலையில் தற்போது அவா் 51 கிலோ எடை பிரிவுக்கு மாறி விட்டாா்.

2.ஷாங்காய் மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டி ஆடவா் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா-டெனிஸ் ஷபோவலோவ் இணை 2-ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.


ன்றைய தினம்

  • உலக அஞ்சல் தினம்
  • உகாண்டா விடுதலை தினம்(1962)
  • தமிழக முன்னாள் முதல்வர் எம்.பக்தவத்சலம் பிறந்த தினம்(1897)
  • டாஸ்மானியா தலைநகர் ஹோபார்ட் நகரம் அமைக்கப்பட்டது(1804)
  • இந்தியாவில் பாவேந்தர் பாரதிதாசனுக்கு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது(2001)

– தென்னகம்.காம் செய்தி குழு