தமிழகம்

1.உரிமையியல் நீதிபதி பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியலை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டது.

2.தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் 11.57 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு கையடக்கக் கணினி வழங்க அரசு திட்டமிட்டுள்ளது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.


இந்தியா

1.தில்லியில் அக்டோபர் 9ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரையிலும் ராணுவ தளபதிகள் மாநாடு நடைபெறவுள்ளது.

2.மத்திய அரசின் முக்கியமான திட்டமாகக் கருதப்படும் தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை ஆய்வு செய்ய நாடாளுமன்ற நிலைக்குழு முடிவு செய்துள்ளது.
சமாஜவாதி கட்சித் தலைவர் ராம் கோபால் யாதவ் தலைமையிலான சுகாதாரத்துக்கான நாடாளுமன்றக் குழு இந்தத் திட்டத்தை ஆய்வு செய்ய இருக்கிறது.

3.ஜம்முவில்  நடைபெற்ற முதல்கட்ட உள்ளாட்சித் தேர்தலில் 65 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.


வர்த்தகம்

1.2018 – 19ம் நிதியாண்டில், ஏப்ரல் – ஆகஸ்ட் , வரையிலான, ஐந்து மாதங்களில், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் துறையின் ஏற்றுமதி, 0.75 சதவீதம் குறைந்து, 1,318 கோடி டாலராக சரிவடைந்துள்ளது.இது, கடந்த நிதியாண்டின், இதே காலத்தில், 1,328 கோடி டாலராக இருந்தது.

2.மத்திய அரசு, கே.ஒய்.சி., எனப்படும், தன் விபரக் குறிப்பு படிவத்தை பூர்த்தி செய்து அளிக்காத, பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த, 18 லட்சம் இயக்குனர்களின், அடையாள எண்ணை முடக்கியுள்ளது.இதனால், அவர்கள், தொடர்ந்து இயக்குனராக பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

3.அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு திங்கள்கிழமை 30 பைசாக்கள் குறைந்து ரூ.74.06 ஆகியுள்ளது.
இது, இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச வீழ்ச்சியாகும்.


உலகம்

1.புதிய கண்டுபிடிப்புகளையும், சுற்றுச்சூழலையும் பொருளாதாரத்துடன் ஒருங்கிணைத்தமைக்காக அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் நார்தாஸ் மற்றும் பால் ரோமர் ஆகிய பொருளாதார நிபுணர்களுக்கு பொருளாதாரத்துக்கான நிகழாண்டின் நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பொருளாதார வளர்ச்சியை நிலையான வளர்ச்சியாகவும், நீண்ட கால வளர்ச்சியாகவும் ஆக்குவது எப்படி என்ற சவாலுக்கு தீர்வு அளித்தமைக்காக  பொருளாதாரத்துக்கான நோபல் பரிசுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

2.ஷார்ஜாவில் அக். 31-ஆம் தேதி தொடங்கவுள்ள உலக புத்தகத் திருவிழாவில் முதல் முறையாக தமிழ்ப் புத்தகங்கள் இடம்பெறவுள்ளன.

3.வட கொரியாவில் மூடப்பட்ட அணு ஆயுத மையங்களில் சோதனையிடுவதற்கு சர்வதேச நிபுணர்களை அனுமதிக்க அந்த நாடு சம்மதம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பேயோ தெரிவித்துள்ளார்.

4.ருமேனியாவில் ஒரே பாலினத்தவர்களின் திருமணங்களுக்கு எதிராக அந்த நாட்டு அரசமைப்புச் சட்டத்தில் மாற்றம் செய்வது குறித்து நடத்தப்பட்ட பொதுவாக்கெடுப்பு, போதிய வாக்குப் பதிவு இல்லாததால் ரத்தாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

5.அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்-எக்ஸ், ஆர்ஜென்டினா நாட்டு செயற்கைக்கோளை தனது ஃபால்கன் 9 ரக ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.


விளையாட்டு

1.ஜகார்த்தாவில் நடைபெற்று வரும் ஆசிய பாரா போட்டிகளில் இந்தியாவுக்கு உலக சாதனையுடன் முதல் தங்கத்தை ஈட்டி எறிதலில் பெற்றுத் தந்தார் சந்தீப் செளத்ரி.
மொத்தம் 3 தங்கம் உள்பட 11 பதக்கங்களை இந்தியா பெற்றுள்ளது.

2.புதுதில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரீமியர் சைக்கிளோத்தான் போட்டியில் மகளிர் பிரிவில் டெபோரா ஹெரால்டும், ஆடவர் பிரிவில் ஸ்ரீதர் சாவனூரும் தங்கம் வென்றனர்.

3.ஏடிபி, டபிள்யுடிஏ சர்வதேச டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் ரபேல் நடால், சிமோனா ஹலேப் ஆகியோர் முதலிடத்தில் நீடித்து வருகின்றனர்.
ஏடிபி தரவரிசையில் நடால் 8260 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.
ருமேனியாவின் சிமோனா ஹலேப் 7421 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

4.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒரு நாள் தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர்கள் விராட் கோலி, பும்ரா ஆகியோர் தங்கள் நிலைகளை தக்க வைத்துள்ளனர்.
பேட்ஸ்மேன் வரிசையில் கோலி 884 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். ரோஹித் சர்மா 842 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், 802 புள்ளிகளுடன் ஷிகர் தவன் 5-ஆம் இடத்திலும் உள்ளனர்.
பெளலர்களில் இந்தியாவின் ஜஸ்ப்ரீத் பும்ரா 797 புள்ளிகளுடன் முதலிடத்திலும், சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் 700 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

5.உலக மல்யுத்த சாம்பியன் போட்டியில் இந்தியாவின் சார்பில் 30 பேர் கொண்ட அணி கலந்து கொள்கிறது.
ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் வரும் 20 முதல் 28-ஆம் தேதி வரை உலக சாம்பியன் போட்டி நடக்கிறது. இதில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக், ஆசியப் போட்டி தங்கப் பதக்க வீரர் பஜ்ரங் புனியா தலைமையில் 30 பேர் அணி பங்கேற்கிறது.

6.வரும் 18-ஆம் தேதி மஸ்கட்டில் தொடங்கும் 5-ஆவது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா உள்பட 6 நாடுகள் பங்கேற்கின்றன.


ன்றைய தினம்

  • உலக அஞ்சல் தினம்
  • உகாண்டா விடுதலை தினம்(1962)
  • தமிழக முன்னாள் முதல்வர் எம்.பக்தவத்சலம் பிறந்த தினம்(1897)
  • டாஸ்மானியா தலைநகர் ஹோபார்ட் நகரம் அமைக்கப்பட்டது(1804)
  • இந்தியாவில் பாவேந்தர் பாரதிதாசனுக்கு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது(2001)
  • தென்னகம்.காம் செய்தி குழு