தமிழகம்

1. தமிழகத்தில் உள்ள 13 மாவட்டங்களில் அமைக்கப்பட்ட 46 வாக்குச்சாவடிகளில் முறையாக வாக்குப்பதிவு நடைபெறவில்லை, தவறு நடந்துள்ளது என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறியுள்ளார்.

2.தமிழகத்தில் 10 புதிய தொழிற்சாலைகளை துவக்க வருகிற ஜூன் மாதம் அடிக்கல் நாட்டு விழா நடைபெறவுள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை தெரிவித்தார்.


இந்தியா

1.17-வது மக்களவைத் தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு நாள் தாமதமாக மே 24-ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


வர்த்தகம்

1.தொலைத் தொடர்பு சேவையில் ஈடுபட்டுள்ள பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு லாபம் 29 சதவீதம் அதிகரித்துள்ளது.


உலகம்

1.மதநிந்தனை குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட பாகிஸ்தானிய கிறிஸ்துவ பெண்ணான ஆசியா பீபீ, தனது கணவருடன் கனடா சென்று சேர்ந்தார்.


விளையாட்டு

1.மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் 3 ஆண்டுகள் கழித்து களிமண் தரை மைதானத்தில் முதல் வெற்றியை பெற்றுள்ளார் ரோஜர் பெடரர்.


ன்றைய தினம்

  • ரோமானிய சுதந்திர தினம்(1877)
  • கான்பராவில் ஆஸ்திரேலிய பார்லிமென்ட் திறந்து வைக்கப்பட்டது(1927)
  • காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது(1985)
  • குதிரையால் செலுத்தப்படும் உலகின் முதலாவது பயணிகள் வண்டி, பம்பாய் நகரில் அறிமுகப்படுத்தப்பட்டது(1874)

– தென்னகம்.காம் செய்தி குழு