தமிழகம்

1.புதிதாக மேலும் 2 ஆயிரம் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் உருவாக்கப்படும் என்று வேளாண் துறை அமைச்சர் ஆர்.துரைக்கண்ணு தெரிவித்துள்ளார்.

2.சென்னை ஐசிஎஃப் ரயில் பெட்டித் தொழிற்சாலையில், புதிய வடிவமைப்புடன் கூடிய தொடர் கண்ணாடி ஜன்னல்கள் கொண்ட ரயில் பெட்டிகள் பயணிகளைக் கவரும் வகையில் தயாரிக்கப்பட்டு வருகிறது.


இந்தியா

1.நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களையும் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) பாதுகாப்பின்கீழ் கொண்டு வரும் திட்டம் தொடர்பான இறுதிக்கட்ட நடவடிக்கைகளில் மத்திய உள்துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.

2.யூனியன் பிரதேசங்களான டாமன்-டையூ மற்றும் தாத்ரா-நாகர் ஹவேலியில் முதல் மருத்துவக் கல்லூரியை அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.


வர்த்தகம்

1.சென்ற நிதி ஆண்டில் நாட்டின் தேயிலை ஏற்றுமதி சாதனை அளவை எட்டியது.தேயிலை உற்பத்தி முதல் முறையாக 132.5 கோடி கிலோவை எட்டியது. முந்தைய 2016-17 நிதி ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 7.5 கோடி கிலோ அதிகமாகும்.

2.பி.எஸ்.என்.எல்., நிறு­வ­னத்­தின் 2017 – 18ம் ஆண்டு வரு­மா­னம் 2,510 கோடி ரூபாய். இது, 2016 – 17ஐ விட, 429 கோடி ரூபாய் குறைவு


உலகம்

1.ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அந்நாட்டின் அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.

2.சவூதி அரேபியாவில் பெண்கள் வரும் ஜூன் 24-ஆம் தேதி முதல் கார் ஓட்ட அனுமதிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

3.ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தற்காலிக உறுப்பினராக பரஸ்பரம் ஆதரவளிக்க இந்தியாவும் கௌதமாலாவும் ஒப்புக் கொண்டுள்ளன.


விளையாட்டு

1.ஆர்ஜென்டீனாவில் நடைபெறவுள்ள யூத் ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் மானவ் தாக்கர் தகுதி பெற்றுள்ளார்.


ன்றைய தினம்

  • ரோமானிய சுதந்திர தினம்(1877)
  • கான்பராவில் ஆஸ்திரேலிய பார்லிமென்ட் திறந்து வைக்கப்பட்டது(1927)
  • காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது(1985)
  • குதிரையால் செலுத்தப்படும் உலகின் முதலாவது பயணிகள் வண்டி, பம்பாய் நகரில் அறிமுகப்படுத்தப்பட்டது(1874)

–தென்னகம்.காம் செய்தி குழு