தமிழகம்

1.தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2.தமிழகத்தில் 3, 4, 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு வரும் 2020-2021-ஆம் கல்வியாண்டில் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வரும் கல்வியாண்டிலேயே (2019-2020) அதை நடைமுறைப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


இந்தியா

1.பொருளாதார விவகாரங்கள் துறைச் செயலர் சுபாஷ் சந்திர கர்க், நிதித் துறைச் செயலராக வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டார்.

2.போலிகளையும், விதிமீறலையும் உடனடியாக கண்டுபிடிக்கும் வகையில் நாடு முழுவதும் ஸ்மார்ட் கார்டு வடிவத்தில் மட்டுமே வாகன ஓட்டுநர் உரிம அட்டை மற்றும் ஆர்.சி.புத்தகம் மின்னணு முறையில் (ஸ்மார்ட் கார்ட்) மாற்றம் செய்யப்பட்டு வழங்கப்பட இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


வர்த்தகம்

1.சீனாவில் 3-வது தகவல் தொழில்நுட்ப (ஐடி) வர்த்தக வழித்தடத்தை இந்தியா தொடங்கியுள்ளது.
இந்த தகவல் தொழில்நுட்ப வர்த்தக வழித்தடத்தை மேம்படுத்துவதற்காக நாஸ்காம் அமைப்பு, ஜியாங்ஸு மாகாணம் ஸிகோவ் நகரத்துடன் உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.

2.யர்னஸ்ட்அண்டு யங்’ நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் மின்னணு வர்த்தக நிறுவனங்களும், வலைதளங்களில் புதுமையான தொழில்களில் ஈடுபடும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களும், 2018ல், 700 கோடி டாலர் முதலீட்டை ஈர்த்துள்ளன.460 கோடி டாலர்இது, இந்திய ரூபாய் மதிப்பில், 50 ஆயிரம் கோடி. இத்தொகை, தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்கள், துணிகர முதலீட்டாளர்களிடம்இருந்து திரட்டப்பட்டுள்ளது.


உலகம்

1.ஒலியைவிட வேகமாகச் செல்லக் கூடிய பயணிகள் விமானங்களை உருவாக்கும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையத்தின் (நாசா) முயற்சியில் ஒரு முன்னேற்றமாக, டி-38 ரக விமானங்களில் உருவாகும் அதிர்வலையை விஞ்ஞானிகள் படம் பிடித்துள்ளனர்.

2.ஐ.நா. மேம்பாட்டு அமைப்பின் புதிய நல்லெண்ண தூதராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கரும், தொலைக்காட்சி பிரபலமுமான பத்மா லட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார்.

3.பின்லாந்து நாட்டில் சமூக நலன் மற்றும் சுகாதார சீர்திருத்த மசோதாவை நிறைவேற்ற முடியாத காரணத்தினால், அந்நாட்டின் பிரதமர் ஜுஹா சிபிலா தனது பதவியை வெள்ளிக்கிழமை ராஜிநாமா செய்துள்ளார்.


விளையாட்டு

1.உலகப் புகழ்பெற்ற ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற காலிறுதிச் சுற்றில் தைவான் வீராங்கனை தாய் ஸு யிங்கிடம் 15-21, 19-21 என்ற நேர் செட் கணக்கில் இந்தியாவின் சாய்னா நெக்வால் தோல்வி அடைந்தார்.


ன்றைய தினம்

  • எகிப்தில் 1919 புரட்சி வெடித்தது (1919)
  • லிபனான் ஆசிரியர் தினம்
  • பார்பி பொம்மை முதன் முதலாக விற்பனைக்கு வந்தது(1959)
  • சனியின் துணைக்கோளான என்செலாடசில் திரவ நிலையில் நீர் கண்டுபிடிக்கப்பட்டது(2006)

– தென்னகம்.காம் செய்தி குழு