Current Affairs – 9 June 2019
தமிழகம்
1.தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தல் தொடர்பான அனைத்து நடைமுறைகளையும் ஒரு மாதத்தில் முடிக்க சட்டப் பேரவைச் செயலகம் தீர்மானித்துள்ளது.
இந்தியா
1.பிரதமர் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தை (பிஎம்-கிசான்) விரிவுபடுத்தி அனைத்து விவசாயிகளுக்கும் நிதியுதவி வழங்குவதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது.
2.பஞ்சாப் மாநில அரசின் முக்கியத் திட்டங்களை வகுப்பதற்காக, அந்த மாநில முதல்வர் அமரீந்தர் சிங் 8 ஆலோசனைக்குழுக்களை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ள நிலையில், அதிலுள்ள எந்தக்குழுவிலும் அமைச்சர் நவ்ஜோத் சித்து இடம் பெறவில்லை.
3.5-வது சர்வதேச யோகா தினத்தின் பிரதான நிகழ்ச்சி இந்த ஆண்டு ராஞ்சியில் நடைபெறவுள்ளதாகவும், அதில் பிரதமர் மோடி பங்கேற்பதாகவும் ஆயுஷ் அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வர்த்தகம்
1.கடந்த மே மாதத்தில், இந்திய நுகர்வோர் நம்பிக்கை சரிவடைந்துள்ளதாக, ரிசர்வ் வங்கியின், ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
2.இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு மே 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 42,180 கோடி டாலராக (ரூ.29.52 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது.
3.மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட் தயாரிப்புக்கு முன்னதாக தொழில் துறையினரின் ஆலோசனைகளை பெறும் வகையில் ஜூன் 11-ஆம் தேதி வர்த்தக கூட்டமைப்புகளை சந்தித்துப் பேச உள்ளார்.
உலகம்
1.இந்தியாவுக்கு ஆளில்லா போர் விமானங்களை விற்பனை செய்வதற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
2.பூடான் நாட்டில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு மன்னரை சந்தித்துப் பேசினார்.
3.இந்தியா-மாலத்தீவுகள் இடையே பாதுகாப்பு, சுகாதாரம் உள்பட 6 துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம் சனிக்கிழமை கையெழுத்தானது.
விளையாட்டு
1.பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலியாவின் இளம் வீராங்கனை ஆஷ்லி பர்டி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.
2.பிரெஞ்சு ஓபன் அரையிறுதி ஆட்டத்தில், டொமினிக் தீமிடம் நோவக் ஜோகோவிச் தோல்வியடைந்தார்.
இன்றைய தினம்
- புதுச்சேரி துணைநிலை கவர்னர் கிரண்பேடி பிறந்த தினம்(1945)
- வால்ட் டிஸ்னியின் டொனால்ட் டக் வரைகதை வெளிவந்தது(1934)
- வடமேற்கு சீனாவில் ஜப்பானியரின் ஆக்கிரமிப்பை சீனக் குடியரசு அங்கீகரித்தது(1935)
– தென்னகம்.காம் செய்தி குழு