தமிழகம்

1.தாம்பரம்- திருநெல்வேலி அந்தியோதயா விரைவு ரயில் சேவையை ரயில்வே இணை அமைச்சர் ராஜன் கோஹைன், மத்திய நிதி- கப்பல்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

2.பிரபல கியூ.எஸ். நிறுவனம் வெளியிட்டுள்ள உலக பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலில் முதல் 200 இடங்களில் 3 இந்திய கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன.
மும்பை ஐஐடி, பெங்களூரு ஐஐஎஸ்சி, தில்லி ஐஐடி ஆகியவை முதல் 200 இடங்களில் இடம் பிடித்துள்ளன. சென்னை அண்ணா பல்கலைக்கழகம், வேலூர் விஐடி உள்பட மொத்தம் 24 இந்திய கல்வி நிறுவனங்கள் இந்த முறை தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

3.மதுரையில் இருந்து ஹைதராபாத்துக்கு பயணிகள் விமான சேவையை இண்டிகோ விமான நிறுவனம் தொடங்கியது .


இந்தியா

1.இந்தியாவின் 16 மாநிலங்களில் உள்ள நிலத்தடி நீரில் கடுமையான யுரேனியக் கலப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். மேலும், அந்த யுரேனியத்தின் அளவு, உலக சுகாதார அமைப்பால் இந்தியாவுக்கென நிர்ணயம் செய்யப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வர்த்தகம்

1.இந்தியாவில் கடந்த 2017-18 நிதி ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடு 6,196 கோடி டாலராக (சுமார் ரூ.3.04 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


உலகம்

1.ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இருநாள் பயணமாக  சீனா செல்கிறார்.


விளையாட்டு

1.ஆசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஜிஸ்னா மேத்யூ தங்கம் வென்றார்.

2.பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் இறுதிச் சுற்றுக்கு ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் தகுதி பெற்றுள்ளார்.


ன்றைய தினம்

  • தங்கனீக்கா குடியரசானது(1962)
  • வால்ட் டிஸ்னியின் டொனால்ட் டக் வரைகதை வெளிவந்தது(1934)
  • வடமேற்கு சீனாவில் ஜப்பானியரின் ஆக்கிரமிப்பை சீனக் குடியரசு அங்கீகரித்தது(1935)

–தென்னகம்.காம் செய்தி குழு