தமிழகம்

1.நாடு முழுவதும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவது தொடர்பாக மத்திய அரசால் தொடங்கப்படவுள்ள புதிய திட்டத்துக்கான ஆய்வுக் குழுவினர் புதுக்கோட்டை மாவட்டத்துக்கு வந்தனர்.

2.சென்னையில் ரூ.5 ஆயிரம் கோடியில் இரண்டு கூட்டு சுழற்சி முறையிலான எரிவாயு சுழலி மின் நிலையங்கள் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.


இந்தியா

1.அரசு கடன் பத்திரங்களை வெளியிடுவது தொடர்பாக மத்திய அரசுடன் ஆலோசிக்க இருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். மேலும், இவை முதல்முறையாக வெளிநாட்டில் மட்டுமே விற்பனை செய்யப்படவுள்ளன.


வர்த்தகம்

1.கடந்த நிதியாண்டில் வர்த்தகத்துக்கு தயாரான உருக்குப் பொருள்களின் இறக்குமதி 78.30 லட்சம் டன்னாக இருந்தது என்று நாடாளுமன்றத்தில் மத்திய உருக்குத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.


உலகம்

1.ஆப்கானிஸ்தான் குழுவினர்-தலிபான் பிரதிநிதிகள் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை, கத்தார் தலைநகர் தோஹாவில் 2-ஆவது நாளாக  தொடர்ந்தது.

2.யுரேனியம் செறிவூட்டல்-கையிருப்புக்கான உச்சவரம்பை ஈரான் மீறியுள்ள நிலையில், அந்த நாட்டுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


விளையாட்டு

1.விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு ரபேல் நடால், செரீனா வில்லியம்ஸ், சிமோனா ஹலேப் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

2.போலந்தில் நடைபெற்ற குட்னோ சர்வதேச தடகளப் போட்டி மகளிர் 200 மீ. ஓட்டத்தில் இந்திய வீராங்கனை ஹிமாதாஸ் தங்கப் பதக்கம் வென்றார்.


ன்றைய தினம்

  • ஆஸ்திரேலிய அரசியலமைப்பு தினம்
  • அர்ஜென்டீனா விடுதலை தினம்(1816)
  • பாகிஸ்தான் தனது முதலாவது அஞ்சல் தலையை வெளியிட்டது(1948)
  • ஆப்ரிக்க ஒன்றியம், அடிஸ் அபாபாவில் அமைக்கப்பட்டது(2002)
  • அக்னி 3 ஏவுகணை ஒரிசாவில் சோதிக்கப்பட்டது(2006)

– தென்னகம்.காம் செய்தி குழு