Current Affairs – 9 July 2018
தமிழகம்
1.தமிழகத்தில் இயக்கப்பட்டு வரும் நடத்துநர் இல்லா பேருந்துகளின் எண்ணிக்கை 300 ஆக அதிகரிக்கப்படும் என போக்குவரத்துத் துறை உயரதிகாரிகள் கூறினர்.
2.தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிமராமத்துப் பணிகளைக் கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகள் 7 பேரை நியமித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
இந்தியா
1.மேகாலய மாநிலம், ஷில்லாங்கில் வடகிழக்கு கவுன்சிலின் 67-ஆவது கூட்டம், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் தொடங்குகிறது.
2.கடந்த 2016-ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து 55 ஆயிரம் குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தகவலை வெளியிட்டுள்ளது.
வர்த்தகம்
1.இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு நடப்பாண்டின் மார்ச் மாத இறுதி நிலவரப்படி 2,434 கோடி டாலர் (ரூ.1.58 லட்சம் கோடி) அதிகரித்து 42,455 கோடி டாலராக (ரூ.27.59 லட்சம் கோடி) இருந்தது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
உலகம்
1.அமெரிக்காவில் உள்ள தியேல் அறக்கட்டளையின் 2018 ம் ஆண்டிற்கான தியேல் பெல்லோஷிப் விருது, சென்னையைச் சேர்ந்த மாணவி அபர்ணா கிருஷ்ணனுக்கு கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 20 பேர் பட்டியலில் இவரும் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விளையாட்டு
1.உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்திய ரஷ்யாவை 4-3 என பெனால்டி ஷூட் அவுட் முறையில் வென்று குரோஷிய அணி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.
2.ஜிம்னாஸ்டிக்ஸ் உலகக்கோப்பையில் இந்தியாவின் தீபா கர்மாகர் தங்கப் பதக்கம் வென்றார்
3.கோவையில் நடைபெற்ற 21-ஆவது தேசிய அளவிலான கார் பந்தயப் போட்டியில் எல்.பி.ஜி.பார்முலா 4 கார் பந்தயத்தின் முதல் போட்டியில் தில்லி வீரர் ரோஹித் கன்னா முதலிடம் பிடித்தார்.
4.இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இன்றைய தினம்
- ஆஸ்திரேலிய அரசியலமைப்பு தினம்
- அர்ஜென்டீனா விடுதலை தினம்(1816)
- ஆப்ரிக்க ஒன்றியம், அடிஸ் அபாபாவில் அமைக்கப்பட்டது(2002)
- அக்னி 3 ஏவுகணை ஒரிசாவில் சோதிக்கப்பட்டது(2006)
–தென்னகம்.காம் செய்தி குழு