Current Affairs – 9 January 2019
தமிழகம்
1.கிராம மக்கள் பயன்பெறும் வகையில் தமிழகம் முழுவதும் 100 கூட்டுறவு சிறப்பு அங்காடிகள் தொடங்கப்படும் என்று, கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார்.
2.விழுப்புரம் மாவட்டத்தைப் பிரித்து கள்ளக்குறிச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் தோற்றுவிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார். இதையடுத்து, தமிழகத்தில் உள்ள மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 33 -ஆக உயர்கிறது.
3.வரும் கல்வியாண்டு முதல் நிபுணர் குழு அளித்த பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டே பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க ஏஐசிடிஇ முடிவு செய்துள்ளது.
4.தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் குறித்து வருகின்ற மே மாதம் இறுதி வாரத்தில் அறிவிப்பு வெளியிடப்படும் என உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் உத்தரவாதம் அளித்துள்ளது.
இந்தியா
1.சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் மத்திய அரசு அனுப்பியது செல்லாது என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. அவர் சிபிஐ இயக்குநராக தொடர வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2.டிஎன்ஏ (பயன் மற்றும் பயன்பாடு) தொழில்நுட்ப ஒழுங்கு மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டு குரல் ஓட்டு மூலம் நிறைவேற்றப்பட்டது.
3.அரசு வேலை வாய்ப்பு மற்றும் உயர் கல்வி நிறுவன சேர்க்கையில் உயர் சாதி ஏழைகளுக்கு (பொது பிரிவினர்) 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அரசியல் சாசன (124-வது சட்டத் திருத்த) மசோதா 2019 மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.
4.அயோத்தி நில விவகார வழக்கை விசாரிக்க 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வர்த்தகம்
1.மின்னணு பணப் பரிவர்த்தனைகளை மேம்படுத்துவது, பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து, பரிந்துரை வழங்க, ரிசர்வ் வங்கி, உயர்மட்டக் குழுவை அமைத்துள்ளது.
2.மாநிலங்களின் ஏற்றுமதியை மேம்படுத்துவது தொடர்பாக, மத்திய – மாநில அரசுகளின் வர்த்தக அமைச்சர்கள் பங்கேற்கும், வர்த்தக வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக் குழுவின் ஆலோசனை கூட்டம், நாளை டில்லியில் நடைபெற உள்ளது.
உலகம்
1.பன்னாட்டு நிதியத்தின் (ஐஎம்எஃப்) முதல் பெண் தலைமைப் பொருளாதார நிபுணராக மைசூருவில் பிறந்த கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார். ஐஎம்எஃப் வரலாற்றிலேயே தலைமைப் பதவியில் அமர்ந்த முதல் பெண் இவர்தான்.
2.உலக வங்கியின் தலைவர் ஜிம் யோங் கிம், தனது பதவிக்காலம் முடிய இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ள நிலையில் அதற்கு முன்னரே பதவி விலகுவதாக திடீரென அறிவித்துள்ளார். ஜனவரி 31 வரை அன்று அவர் தனது பதவியிலிருந்து விலகுகிறார்.
விளையாட்டு
1.2019 ஐபிஎல் தொடர் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே நடைபெறும் என்று அறிவித்துள்ள பிசிசிஐ ஐபிஎல் போட்டிகள் மார்ச் 23-ம் தேதியன்று தொடங்கும் என்று அறிவித்துள்ளது.
இன்றைய தினம்
- வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம்
- ஐநா தலைமையகம் நியூயார்க்கில் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது(1951)
- நாசாவின் கொலம்பியா விண்ணோடம் ஏவப்பட்டது(1990)
- புனித ஜார்ஜ் கோட்டையில் சென்னை சட்டமன்றத்தின் முதல் கூட்டம் நடைபெற்றது(1921)
- கனெக்டிகட், அமெரிக்காவின் 5வது மாநிலமாக இணைந்தது(1788)
– தென்னகம்.காம் செய்தி குழு