தமிழகம்

1.2019-20-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெள்ளிக்கிழமை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
தமிழகத்துக்கு நீண்டகாலத்துக்கு பயனளிக்கும் வகையில் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 36 புதிய திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

2.தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த கு.ஞானதேசிகன் திடீரென மாற்றப்பட்டார்.
அவர் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.


இந்தியா

1.பொய்ச் செய்திகளைக் கண்டறிவதற்கான வழிமுறைகளை வகுப்பது உள்ளிட்ட 29 தனிநபர் மசோதாக்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டன.

2.ஹெலிகாப்டரில் இருந்து எதிரிகளின் பீரங்கிகளைத் தாக்கி அழிக்கவல்ல இந்தியாவின் ஹெலினா ஏவுகணை வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டது.


வர்த்தகம்

1.நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான கால அளவில் நிகர அளவிலான நேரடி வரி வசூல் ரூ.7.89 லட்சம் கோடியாக இருந்தது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2.பண்டிகை கால விற்பனை மந்தமான நிலையில் இருந்ததையடுத்து உள்நாட்டில் கார், பைக் விற்பனை சென்ற ஜனவரி மாதத்தில் 1.87 சதவீதம் சரிவைக் கண்டது.


உலகம்

1.தாய்லாந்தில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் பிரதமர் பதவி வேட்பாளராக அந்த நாட்டு இளவரசி உபோல்ரத்தனா  போட்டியிடவிருக்கிறார்.

2.அமெரிக்காவின் டெக்சாஸ் பயிற்சிக் கழகத் (லைசியம்) தலைவராக இந்திய-அமெரிக்கரான சஞ்சய் ராமபத்ரன் பொறுப்பேற்றுள்ளார்.


விளையாட்டு

1.சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டி அரையிறுதிச் சுற்றுக்கு இந்திய வீரர்கள் பிரஜ்னேஷ் குணேஸ்வரன், சசிகுமார் முகுந்த் உள்ளிட்டோர் முன்னேறியுள்ளனர்.

2.சீன நிறுவனமான லீ நிங் குடன் ரூ.50 கோடிக்கு நான்கு ஆண்டுக் கால ஒப்பந்தம் செய்துள்ளார் பாட்மிண்டன் நட்சத்திரம் பி.வி.சிந்து.


ன்றைய தினம்

  • வில்லியம் மார்கன், வாலிபாலை கண்டுபிடித்தார்(1895)
  • டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டது(1900)
  • அமெரிக்காவில் பகலொளி சேமிப்பு நேரம் அறிமுகப்படுத்தப்பட்டது(1942)
  • பொதுநலவாய அமைப்பினுள் ஜமைக்கா விடுதலை பெற்றது(1962)

– தென்னகம்.காம் செய்தி குழு