தமிழகம்

1.காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேரத் தலைவரை நியமிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சனிக்கிழமை மனு தாக்கல் செய்துள்ளது.

2.இந்திய கல்வி மேம்பாட்டு சங்கத்தின் தேசிய தலைவராக விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


இந்தியா

1. ஜம்மு-காஷ்மீரில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சனிக்கிழமை நடைபெற்ற 8-ஆம் கட்ட தேர்தலில் 79.9 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

2. வங்கதேச விடுதலைப் போரில் உயிர்நீத்த இந்திய ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு விருது வழங்கப்படவுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.


வர்த்தகம்

1.சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஆண்டுக் கணக்குகளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மத்திய அரசு அடுத்தாண்டு மார்ச் 31 வரையில் நீட்டித்துள்ளது.

2.நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு நவம்பர் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 93 கோடி டாலர் அதிகரித்துள்ளது.

3.ஆக்ஸிஸ் வங்கியின் இயக்குநர் குழுவில் அமிதாப் சவுத்ரியை கூடுதல் இயக்குநராக நியமிக்க அந்த வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

4.நடப்பு பருவத்தில் நாட்டின் பருத்தி உற்பத்தி 340 லட்சம் பொதிகளாக குறையும் என இந்திய பருத்தி கழகம் (சிஏஐ) தெரிவித்துள்ளது.

5.கடந்த 11 மாதங்களில் இந்திய நிறுவனங்கள் அறிவித்த கையகப்படுத்துதல் நடவடிக்கைகளின் மதிப்பு 8,210 கோடி டாலர் (ரூ.5.74 லட்சம் கோடி) என கிராண்ட் தோர்ன்டன் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது


உலகம்

1.ஆர்மீனியாவில் நாடாளுமன்றத்துக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.

2.பயன்பாட்டாளர்களின் தகவல்களை அவர்களுக்குத் தெரியாமல் விற்பனை செய்தக் குற்றத்துக்காக ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு 10 மில்லியன் யூரோக்களை இத்தாலி அபராதமாக விதித்துள்ளது.

3.தில்லியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ஐஸ்லாந்து வெளியுறவுத் துறை அமைச்சர் கெள லோகுரேர் ஆகியோர் சனிக்கிழமை முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர்.


விளையாட்டு

1.உலக ஜூனியர் டேபிள் டென்னிஸ் போட்டியின் காலிறுதி சுற்றுக்கு இந்திய வீரர் மானவ் தாக்கர் முன்னேறியுள்ளார்.

2.முதல்தர கிரிக்கெட்டில் அறிமுக ஆட்டத்தில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் 21 வயது மத்தியப் பிரதேச கிரிக்கெட் வீரர் அஜய் ரொஹேரா.


ன்றைய தினம்

  • சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம்
  • தான்சானியா விடுதலை தினம்(1961)
  • இந்திய காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் சோனியா பிறந்த தினம்(1946)
  • இந்திய சட்டசபை ராஜேந்திர பிரசாத் தலைமையில் அமைக்கப்பட்டது(1946)
  • ஐக்கிய அரபு நாடுகள் அமைப்பு ஐ.நா.,வில் இணைந்தது(1971)
  • தென்னகம்.காம் செய்தி குழு