தமிழகம்

1.மாநில தலைமை தகவல் ஆணையராக எம்.ஷீலாபிரியாவுக்கும், 4 தகவல் ஆணையர்களுக்கும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணம் செய்துவைத்தார்.
2.தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) தலைவராக குமரன் பதிப்பகத்தின் வைரவன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


விளையாட்டு

1.இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக சண்டிகா ஹதுருசிங்கா நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பதவிக்காலம் 3 வருடங்கள் ஆகும்.
2.மெக்சிகோவில் நடைபெற்று வரும் உலக பாரா நீச்சல் சாம்பியன்ஷிப்பில் 200 மீட்டர் மிட்லே நீச்சல் போட்டியில் எஸ்-11 பிரிவில் இந்திய வீராங்கனை காஞ்சனாமாலா பாண்டே முதன்முறையாக தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.


இன்றைய தினம்

1.இன்று சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் (International Anti-Corruption Day).
ஊழல் அனைத்து நாடுகளிலும் இருக்கிறது. இந்தியாவில் கடந்த ஆண்டு வேலையை முடிக்க இரண்டில் ஒருவர் லஞ்சம் கொடுக்கிறார் என்று டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பின் ஆய்வு கூறுகிறது. ஊழல் நாட்டின் வளர்ச்சி வேகத்தைக் குறைக்கிறது. இலக்குகளை அடைவதற்குத் தடையாக உள்ளது. ஊழலற்ற சமுதாயத்தை படைக்க ஐ.நா. 2000ஆம் ஆண்டில் இத்தினத்தை அறிவித்தது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு