தமிழகம்

1.இந்தியா முழுவதும் இயக்குவதற்காக “ஃபேம் இந்தியா’ திட்டத்தின் கீழ் 5,595 மின்சாரப் பேருந்துகள் வழங்கப்படும் என மத்திய கனரக தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் தமிழகத்துக்கு 525 மின்சாரப் பேருந்துகள் வழங்கப்பட உள்ளன.

2.நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் அவலாஞ்சி பகுதியில் அதிகபட்சமாக 820 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது தமிழகத்தில் ஒரே நாளில் பெய்த அதிகபட்ச மழை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்தியா

1.குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி, பாரதிய ஜன சங்கத்தின் தலைவர் நானாஜி தேஷ்முக், பாடகர் பூபேன் ஹஸாரிகா ஆகியோருக்கு நாட்டின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா’ வழங்கி கெளரவிக்கப்பட்டது.

2.தேசிய மருத்துவ ஆணையத்தை ஏற்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ஒப்புதலை அளித்துள்ளார்.

3.ஆதாயம் தரும் இரட்டைப் பதவி விவகாரத்தை ஆய்வு செய்வதற்கான நாடாளுமன்றக் கூட்டுக் குழு, இந்திய பிரஸ் கவுன்சில் உள்ளிட்ட குழுக்களுக்கான மாநிலங்களவை எம்.பி.க்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


வர்த்தகம்

1.நாட்டின் முன்னணி சிமென்ட் தயாரிப்பு நிறுவனமான இந்தியா சிமென்ட்ஸ் கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில் ரூ.72 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.

2.கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சிட்டி யூனியன் வங்கியின் முதல் காலாண்டு நிகர லாபம் 15 சதவீதம் உயர்ந்து ரூ.186 கோடியை ஈட்டியுள்ளது.

3.பொதுத் துறையைச் சேர்ந்த சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா முதல் காலாண்டில் ரூ.118.33 கோடி லாபம் ஈட்டியது.


உலகம்

1.பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுக்கு கடந்த ஆண்டு விதித்திருந்த கட்டுப்பாடுகளை அமெரிக்கா நீக்கியுள்ளது.

2.உலக வெப்பமயமாதலைத் தடுக்க அவசர நடவடிக்கை மேற்கொள்ளப்படாவிட்டால் இன்னும் சில ஆண்டுகளில் மனித குலத்துக்குத் தேவையான உணவு உற்பத்தியை மேற்கொள்ள முடியாமல் போய்விடும் என்று ஐ.நா. அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.


விளையாட்டு

1. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன் ஹஷிம் ஆம்லா.

2.மாண்ட்ரியல் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர்கள் நடால், தீம் ஆகியோர் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

3.ஐரோப்பிய மாஸ்டர்ஸ் ஹாக்கிப் போட்டியில் இந்திய மகளிர் அணி வெண்கலப் பதக்கம் வென்று உலக மாஸ்டர்ஸ் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது.


ன்றைய தினம்

  • வெள்ளையனே வெளியேறு இயக்கம் துவங்கப்பட்டது (1942)
  • சிங்கப்பூர் விடுதலை தினம்(1965)
  • தென்னாப்பிரிக்க தேசிய பெண்கள் தினம்
  • தாமஸ் ஆல்வா எடிசன் தனது இருவழி தந்திக்கான காப்புரிமம் பெற்றார்(1892)
  • பைசா சாயும் கோபுரத்தில் கட்டிட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன.இது 200 ஆண்டுகளுக்கு பின்னரே முடிவுற்றது(1173)

– தென்னகம்.காம் செய்தி குழு