Current Affairs – 9 August 2018
தமிழகம்
1.திமுக தலைவர் கருணாநிதியின் உடல் முழு ராணுவ மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க சென்னை மெரீனா கடற்கரையில் அண்ணா நினைவிடத்தின் உள்ளே புதன்கிழமை மாலை அடக்கம் செய்யப்பட்டது.
2.தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரில் புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்படும் என்றும், புதுச்சேரியில் அவருக்கு முழு உருவ வெண்கலச் சிலை நிறுவப்படும் என்றும் அம்மாநில முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.
இந்தியா
1.தகவல் அறியும் உரிமை (ஆர்டிஐ) சட்டத்தின்கீழ் வெளிநாடு வாழ் இந்தியர்கள் விண்ணப்பிக்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்தது.
வர்த்தகம்
1.இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) பகுதி நேர (அதிகாரப்பூர்வமற்ற) இயக்குநராக ஆடிட்டர் எஸ். குருமூர்த்தி, தொழிலதிபர் சதீஷ் காசிநாத் மராத்தே ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உலகம்
1.அமெரிக்கா, சீனா இடையேயான பொருளாதாரப் போரை தீவிரப்படுத்தும் நடவடிக்கையாக, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மேலும் சில பொருள்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
விளையாட்டு
1.வியத்நாம் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் அஜய் ஜெயராம், ரிதுபர்னா தாஸ் ஆகியோர் தங்களது பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினர்.
2.இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பளு தூக்குதல் பிரிவில் போட்டியிட இந்தியாவின் ஸ்னேகா சோரன், ஜெரிமி லால்ரினுங்கா ஆகியோர் தகுதிபெற்றனர்.இளையோர் ஒலிம்பிக் போட்டி வரும் அக்டோபர் 6 முதல் 13-ஆம் தேதி வரையில் ஆர்ஜென்டீனா தலைநகர் பியூனஸ் அயர்ஸில் நடைபெறவுள்ளது.
இன்றைய தினம்
- வெள்ளையனே வெளியேறு இயக்கம் துவங்கப்பட்டது (1942)
- சிங்கப்பூர் விடுதலை தினம்(1965)
- தென்னாப்பிரிக்க தேசிய பெண்கள் தினம்
- தாமஸ் ஆல்வா எடிசன் தனது இருவழி தந்திக்கான காப்புரிமம் பெற்றார்(1892)
- பைசா சாயும் கோபுரத்தில் கட்டிட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன.இது 200 ஆண்டுகளுக்கு பின்னரே முடிவுற்றது(1173)
- தென்னகம்.காம் செய்தி குழு