தமிழகம்

1.தேசிய அளவிலான உயர் கல்வி நிறுவன தரவரிசைப் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த அண்ணா, சென்னைப் பல்கலைக் கழகங்கள் கடந்த ஆண்டைக் காட்டிலும் பின்னடைவைச் சந்தித்துள்ளன.கடந்த முறை 10-ஆம் இடத்தில் இருந்த சென்னை அண்ணா பல்கலைக் கழகம் இம்முறை 14-ஆம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. கோவை பாரதியார் பல்கலைக் கழகம் 21- ஆம் இடத்தையும், திருச்சி என்ஐடி 24- ஆம் இடத்தையும், வேலூர் விஐடி 32- ஆம் இடத்தையும் பிடித்துள்ளன. கடந்த முறை 29-ஆம் இடத்தில் இருந்த சென்னைப் பல்கலைக் கழகம் இம்முறை 33- ஆம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.


இந்தியா

1.மக்களவைத் தேர்தலின்போது வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை எண்ணுவது தொடர்பாக உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்ததையடுத்து, மொத்தம் 20,600 வாக்குச் சாவடிகளில் வாக்கு ஒப்புகைச் சீட்டுகள் எண்ணப்படவுள்ளன.

2.பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மத்திய அரசின் சட்டத் திருத்தத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையை மே 2-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

3.இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட 6 “தனுஷ்’ ரக பீரங்கிகள் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டன.


வர்த்தகம்

1.இந்தியாவின், ஜி.டி.பி., எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி, நடப்பு, 2019 – 20ம் நிதியாண்டில், 7.5 சதவீதமாக உயரும் என, உலக வங்கியின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2.வருமான வரி கணக்கை, நேரடியாக தாக்கல் செய்வோருக்கான விண்ணப்ப படிவம், இந்த ஆண்டு முதல் நிறுத்தப்பட்டுள்ளது என, வருமான வரி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

3.ஹெச்டிஎஃப்சி வங்கி கடன்பத்திரங்களை வெளியிட்டு ரூ.50,000 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது.


உலகம்

1.அமெரிக்காவின் யு.எஸ்.எஸ்.எஸ். உளவு அமைப்பின் தலைவர் ரான்டால்ப் டெக்ஸ் அலேஸ் விரைவில் பதவி விலக இருக்கிறார்.


விளையாட்டு

1.இந்தியா-மலேசியா இடையிலான மகளிர் ஹாக்கி டெஸ்ட் தொடரின் மூன்றாவது ஆட்டம் 4-4 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.


ன்றைய தினம்

  • அமெரிக்க அணுசக்தி கழகம் அமைக்கப்பட்டது(1945)
  • அமெரிக்காவின் முதலாவது விண்வெளி வீரர்கள் 7 பேரின் பெயர்களை நாசா அறிவித்தது(1959)
  • ஜார்ஜியா, சோவியத் ஒன்றியத்தின் விடுதலையை அறிவித்தது(1991)
  • வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் முதல் 3டி திரைப்படத்தை வெளியிட்டது(1953)

– தென்னகம்.காம் செய்தி குழு