தமிழகம்

1.சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி வி.கே.தஹில ராமாணீ தனது ராஜிநாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ராமநாத் கோவிந்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார்.


இந்தியா

1.பிரபல மூத்த வழக்குரைஞர் ராம் ஜெத்மலானி(95) தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். மத்திய சட்டத்துறை அமைச்சராகவும், வழக்குரைஞர் சங்கத் தலைவர் உள்ளிட் பல பதவிகளை வகித்தவர். முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் அமைச்சரவையில் 1996-2000 வரை சட்டத்துறை அமைச்சராகவும், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.

2.நிலவின் சுற்றுப் பாதையில் சந்திரயான்-2 விண்கலம் (ஆர்பிட்டர்) நல்லபடி செயல்பட்டு வருகிறது என இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பு (இஸ்ரோ) திருப்தி தெரிவித்துள்ளது.

3.ஒரே வேலைக்கு ஒரே ஊதியம் வழங்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து, மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள உத்தரவில், ஒரே வேலையை செய்யும் நிரந்தர ஊழியர்களுக்கும் ஒப்பந்த ஊழியர்களுக்கும் ஒரே ஊதியம் வழங்க வேண்டும்.தொடர்ச்சியாக இருக்கும் பணிகளுக்கு தினசரி ஊதிய அடிப்படையில் ஊழியர்களை நியமிக்கக் கூடாது.ஒரு வேலை நிரந்தர தொழிலாளர்களின் வேலையும், ஒப்பந்த தொழிலாளர்களின் வேலையும் வெவ்வேறாக இருந்தால் மத்திய, மாநில அரசுகள் ஊதியம் தொடர்பாக என்ன விதிமுறைகள் இருக்கிறதோ அதையே கடைபிடிக்கலாம்.


வர்த்தகம்

1.இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த மாதம் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 42,860 கோடி டாலராக (ரூ.30.70 லட்சம் கோடி) சரிந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

2.மின்சாரம், டீசல் ஆகிய இரண்டிலுமே இயங்கக் கூடிய “ஹைபிரிட்’ டிராக்டர் ரகத்தை எஸ்கார்ட்ஸ் நிறுவனம் இந்தியாவில் முதல் முறையாக அறிமுகப்படுத்தவிருக்கிறது.


உலகம்

1.வல்லரசு நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தை மீறி, அதிநவீன சாதனங்கள் மூலம் யுரேனியம் செறிவூட்டும் பணியை மேற்கொள்ளத் தொடங்கியிருப்பதாக ஈரான் அறிவித்துள்ளது.


விளையாட்டு

1.யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில்  ரபேல் நடால் – டேனில் மெத்வதேவ் ஆகியோர் மோதுகின்றனர்.

2.பாகிஸ்தான் கிரிக்கெட் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அப்துல் காதிர் (63) மாரடைப்பால்  காலமானார்.


ன்றைய தினம்

  • தேசிய கண் தான தினம்
  • உலக எழுத்தறிவு தினம்
  • இயேசு கிறிஸ்துவின் தாய் அன்னை மரியா பிறந்த தினம்(கிமு 20)
  • ஆசிய தொழில்நுட்பக் கழகம் பாங்காக் நகரில் நிறுவப்பட்டது(1959)
  • நாடுகளின் கூட்டமைப்பில் ஜெர்மனி சேர்ந்தது(1926)

– தென்னகம்.காம் செய்தி குழு