தமிழகம்

1.கொல்லிமலையில் ரூ.270 கோடி மதிப்பீட்டில் 20 மெகாவாட் மின்சாரம் தயாரிப்பதற்கான புதிய நீர் மின் நிலைய திட்டப் பணி 10 நாள்களுக்குள் தொடங்கப்படும் என்று மின்சாரம், மதுவிலக்கு, ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.

2.அரசு ஊழியர் வரன்முறைக் குழுவின் கால அளவு மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அரசுத் துறைகள், உள்ளாட்சி அமைப்புகளில் தேவையற்ற பணியிடங்களைக் கண்டறிவது போன்ற வரன்முறைப்படுத்தல் பணிகளை மேற்கொள்ள ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி எஸ்.ஆதிசேஷையா தலைமையில் அரசு ஊழியர் வரன்முறைக் குழு அமைக்கப்பட்டது.


இந்தியா

1.தில்லி அரசு செயல்படுத்தி வரும் சுகாதாரத் திட்டமான மொஹல்லா கிளினிக்குகளை (ஆரம்ப சுகாதார மையம்) ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலர் பான்-கீ-மூன் தலைமையிலான “தி எல்டர்ஸ்’ பிரதிநிதிகள் குழு வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டது. அப்போது, “மொஹல்லா கிளினிக்குகள் திட்டம் தன்னை மிகவும் கவர்ந்துள்ளது’ என்று பான்-கி-மூன் தெரிவித்தார்.

2.இந்தியாவில் உள்ள 91முக்கிய நீர்த்தேக்கங்களில் நீரின் இருப்பு கடந்த ஒரு வாரத்தில் 4 சதவீதம் அதிகரித்துள்ளது என்று மத்திய நீர் வளம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


வர்த்தகம்

1.மத்திய நிதியமைச்சகம்,பொதுத் துறையைச் சேர்ந்த, 13 நிறுவனங்களின் பங்குகளை திரும்பப் பெறும் திட்டத்திற்கு, கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கியுள்ளது.

2.இந்தியாவின் மின்னணு வர்த்தக சந்தை (இ-காமர்ஸ்) வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் 10,000 கோடி டாலரை தாண்டும் என்பது நாஸ்காம் மற்றும் பிரைஸ்வாட்டர்ஹவுஸ்கூப்பர்ஸ் இந்தியா நிறுவனங்கள் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

3.நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை 2.4 சதவீதமாக குறைந்துள்ளது.கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 1,500 கோடி டாலராக இருந்த நடப்பு கணக்கு பற்றாக்குறையானது நடப்பு நிதியாண்டின் இதே கால அளவில் 1,580 கோடி டாலராக அதிகரித்துள்ளது.


உலகம்

1.மூன்று ஐரோப்பிய நாடுகள் சுற்றுப் பயணத்தின் இறுதிக் கட்டமாக செக் குடியரசு நாட்டுக்குச் சென்றுள்ள ராம்நாத் கோவிந்த், அந்நாட்டு அதிபர் மிலோஸ் சிமானை தலைநகர் பிராகில்  சந்தித்துப் பேசினார்.

2.கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதங்களற்ற பிரதேசமாக்குவது தொடர்பாக வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உனுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தம் தொடர்வதாக டிரம்ப் உறுதியளித்துள்ளார்.


விளையாட்டு

1.யுஎஸ் ஓபன் மகளிர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் செரீனா வில்லியம்ஸ்-ஜப்பானின் ஒஸாகா ஆகியோர் மோதுகின்றனர்.


ன்றைய தினம்

  • உலக எழுத்தறிவு தினம்
  • இயேசு கிறிஸ்துவின் தாய் அன்னை மரியா பிறந்த தினம்(கிமு 20)
  • ஆசிய தொழில்நுட்பக் கழகம் பாங்காக் நகரில் நிறுவப்பட்டது(1959)
  • நாடுகளின் கூட்டமைப்பில் ஜெர்மனி சேர்ந்தது(1926)
  • தென்னகம்.காம் செய்தி குழு