Current Affairs – 8 October 2019
தமிழகம்
1.ஊழியா்களுக்கு வழங்குவதற்காக பிஎஸ்என்எல் நிறுவனத்திடமிருந்து, 24,629 சிம்காா்டுகள் வாங்க மின்சார வாரியம் திட்டமிட்டுள்ளது.
2.கதிா்வீச்சு தொழில்நுட்பம் வாயிலாக இருதய பரிசோதனைகள் மேற்கொள்ளும் மருத்துவ முறைகள் தொடா்பான சா்வதேச மாநாடு சென்னையில் நடைபெற்றது. அதில், சுவிட்சா்லாந்து, ஃபிஜி உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்த மருத்துவ நிபுணா்கள் பலா் கலந்துகொண்டனா்.
இந்தியா
1.மாமல்லபுரத்தில் மோடி- ஷி ஜின்பிங் இடையே நடைபெறும் பேச்சுவாா்த்தையில் எல்லைப் பிரச்னை, பயங்கரவாத ஒழிப்பு, வா்த்தகம், இருதரப்பு உறவு ஆகிய விஷயங்கள் முக்கிய அம்சங்களாக இடம் பெற வாய்ப்பு இருப்பதாக வெளியுறவுக் கொள்கை நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.
2.மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் மெட்ரோ ரயில்நிலையத்துக்கான கட்டுமானத்துக்காக ஆரே காலனியில் மரங்களை வெட்டக் கூடாது என்று உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
வர்த்தகம்
1.புதிய தொழில்துறை கொள்கை குறித்த வரையறைகளை தயாரிக்க, மத்திய அரசு செயற்குழு ஒன்றை
அமைத்துள்ளது.மத்திய அரசு, ஏழு மாநில அரசுகள் மற்றும் உள்நாட்டு தொழில்துறை ஆகியவற்றை சேர்ந்த
உறுப்பினர்களை கொண்டதாக, இந்த செயற்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவானது, தொழிற்துறையின் பிரச்னைகளை சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்து கண்டறியும் என, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலகம்
1.மனித உடல்களில் இருக்கும் செல்கள் மற்றும் செல்கள் எவ்வாறு ஆக்ஸிஜனை உட்கிரகிக்கின்றன என்பது குறித்து ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகளுக்கு இந்த ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் ஜி கேலின், கிரெக் செமன்கா மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த சர் பீட்டர் ராட்கிளிஃப், ஆகிய 3 பேருக்கும் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
செல்களின் வளர்சிதை மாற்றம், செல்களின் அளவுகளுக்கும், ஆக்ஸிஜன் கிடைக்கும் அளவுக்கும் இடையே இருக்கும் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இந்த ஆராய்ச்சியில் அடங்கும்.
2.இவ்வாண்டின் பிப்ரவரியில், அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெளியிட்ட தரவுகளின்படி, 20 ஆண்டுகளுக்கு முந்தைய புவியுடன் தற்போதைய புவியை ஒப்பிட்டால் தற்போதுள்ள பசுமை அதிகரித்திருப்பது தெரிய வரும். சீனாவிலும் இந்தியாவிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் மரம் நடுதல் காடு வளர்ப்பு மற்றும் தீவிர வேளாண்மை ஆகிய நடவடிக்கைகளே, இதற்குக் காரணமாகும் என்று நாசா கூறியது.
விளையாட்டு
1.விஜய் ஹஸாரே கோப்பை ஒருநாள் போட்டியில் திரிபுராவை 187 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தமிழகம் தனது 6-ஆவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
இன்றைய தினம்
- இந்திய விமானப் படை தினம்
- பெரு கடற்படை தினம்
- கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு தினம்(1959)
- இந்திய விமானப்படை நிறுவப்பட்டது(1932)
- ஜெர்மனி, மேற்கு போலந்தை இணைத்துக் கொண்டது(1939)
– தென்னகம்.காம் செய்தி குழு